பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை வீரர்கள் காட்டிய சாகசத்திற்கு அளவேயில்லை. அனல் கக்கிக்கொண்டு வந்த பேட்டன் டாங்குகளை அவர்கள் தகர்த்தெறிந்ததும், பாகிஸ்தானின் பெரிய சேபர் ஜெட் விமானங்களைப் பங்களூரில் தயாரான நம் சிறிய நாட் விமானங்கள் சுட்டுத் தள்ளியதும், நம் ஜவான்களின் அசகாய சூரத்தனங்களும் ஒர் இதி காசமாகவே எழுதத் தக்கவை. பாகிஸ்தானின் படை வல்லமை மிக்கதுதான். ஆனல் நம் படை அதன் பல்லைத் தட்டிவிட்டது. போரிலும் போர் நிறுத்த நேரத்திலும் பாகிஸ்தான் விமானங்கள் அமிர்தசரஸ் முதலிய நகரங்களின் மீது குண்டுகள் எறிந்து சாதா ரண மக்களின் உயிர்களைப் பலி வாங்கியது. ஆனல் நம் விமானங்கள் சார்கோடா, பெஷாவர் முதலிய பாகிஸ்தானின் விமான தளங்களையும், இராணுவ இலக்குகளையும் மட்டுமே தாக்கி வந்தன. 22 நாள் போரில் பாகிஸ்தானின் 472 டாங்கு களும், 75 விமானங்களும் அழிக்கப்பட்டன. போர் ஆரம்பத்தில் பாகிஸ்தானிடம் 104 சேபர் ஜெட் விமானங்களும், 24 வெடிகுண்டு விமானங்களும் இருந் தன. 4, 802 பாகிஸ்தான் ஜவான்கள் மடிந்தனர், 450 பேர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பாகிஸ் தானில் மொத்தம் 470 சதுர மைல் பிரதேசத்தை நம் படையினர் பிடித்துக் கொண்டனர். சியால்கோட் பகுதியில் 180 சதுர மைலும், லாகூர் பகுதியில் 140 சதுர மைலும், ராஜஸ்தான் பக்கத்தில் 150 சதுர மைலும் பிடிக்கப்பட்டதாக நம் சேனபதி செளதரி தெரிவித் திருக்கிரு.ர். பாகிஸ்தான் பஞ்சாபில் 20 சதுர மைல் பிரதேசத்தை மட்டும் பிடித்துக்கொண் டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்பு பாகிஸ்தான் வசமிருந்த பிரதேசத்தில் டித்வால் பகுதியில் 20 சதுர மைலும், பூஞ்ச் பகுதியில் 200 சதுர மைலும் உள்ள Ꮽ] I 0