பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/363

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதுவரை ஒரேபடியாக, ஒரே கொள்கையுடன், இந்தியாவை ஆதரித்து நிற்கின்றது. இந்த விஷயங்க ளெல்லாம் நமக்கு ஒரு விஷயத் தைக் கற்பிக்கின்றன. நாம் நம்முடைய கால் களிலேயே நிற்கவேண்டும், மிகுந்த வல்லமையோடு விளங்கவேண்டும், பிறரையே எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பதுதான் அது. வெற்றி பெற்ற நாட்டையே உலகம் மதிக்கும். ■ 18 ஆண்டுகளாகக் காஷ்மீர் பிரசினை, காஷ்மீர் பிரசினை என்று பாகிஸ்தான் ஓயாமல் கூறி வருகின்றது. அது காஷ்மீர் மீது படையெடுக்காம லிருந்தால், ஒரு பிரசினையுமே கிடையாது. காஷ்மீர் இந்தியாவுடன் இரண்டறக் கலந்துவிட்டது; அது இந்தியாவின் ஒரு மாகாணம். அது இனி வேறு எந்த நாட்டுடனும் சேருவது, அல்லது தனித்துச் சுயேச் சையாயிருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒர் இராஜ்யத்தைச் சேர்ந்த தனி மாகாணங்களுக்குச் சுயநிர்ணய உரிமை கிடையாது. முன்பு அமெரிக்கா வில் மத்திய ஆட்சியை எதிர்த்துக் கிளம்பிய தென் ராஜ்யங்களைப் படைகள் கொண்டு ஜனதிபதி லிங்கன் அடக்கி ஒடுக்கியது வரலாற்றிலே சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது. மாகாணங்களின் விஷயம் அந்தந்த நாட்டின் உள் விவகாரமாகும். கடமையும் உரிமையும் ஆகும். காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும் பான்மையர் என்ருல், அவர்கள் தனித்திருக்கவில்லை; இந்தியா விலுள்ள ஐந்து கோடி முஸ்லிம்களுடன் சேர்ந்துதான் இருக்கின்றனர். ஐந்து கோடி இந்திய முஸ்லிம்களும் மதச்சார்பற்ற இந்திய அரசாங்கத்தின் கீழ் அமைதி யுடன் இன்பமாக வாழ்ந்து வருவதை உலகம் அறியும். இ. சீ. பா.-23 35 3