பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரத நாட்டின் பாதுகாப்பு படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் உடையான் அரசருள் ஏறு. ' -திருவள்ளுவர் உலகம் சுருங்கிவிட்டது! மிகப் பெரிதான நமது உலகம் இப்பொழுது சுருங்கி விட்டது எனலாம். அது அளவில் குறையா விட்டாலும், துாரம் சமீபமாகிவிட்டது. கண்டத்திற் குக் கண்டம் சென்று வருதல் எளிதாகிவிட்டது. கடல் களை மக்கள் ஏரிகளைப் போல் வேகமாகத் தாண்டிச் செல்ல வசதி யிருக்கின்றது. தபால், தந்தி, தொலை பேசி, கம்பியில்லாத் தந்தி, ரேடியோ, டெலிவிஷன், விமானம் ஆகியவை உலக மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளன. அணுவின் ஆற்றலையும் பயன் படுத்த நாம் தெரிந்துகொண்டிருக்கிருேம். வான மண்டலத்தில் பல கோளங்களுக்கும் பாய்ந்து செல்ல

  • படைகள், சிரத்தையுள்ள குடிமக்கள், (உணவுப் பொருளுற்பத்தி, தளவாடங்களுக்கு ஏற்ற) நிதி நிலைமை, நல்ல அமைச்சர்கள், நேச நாடுகள், பாதுகாப்பு அரண்கள் ஆகிய ஆறு அங்கங்களையுடைய அரசன் அரசர்களிலே ஆண் சிங்கம் போன்றவன்.

S 55