பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும் வழி பிறந்துவிட்டது. தனி நாடுகளும், தனி இராஜ்யங்களும் இனி தனித்தனியாக முன்னேறவோ, பின்தங்கி நிற்கவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எந்த நாட்டின் விஷயமும் உலக விஷயமாகின்றது: எந்த மக்களின் நிலைமையும் மனித சமுதாய நிலை யாகின்றது. உலக நாடுகளின் பொதுச் சபையாக ஐக்கிய நாடுகளின் சபை அமைந்துள்ளது. அதன் கிளை கள் பல உலக மக்களின் சுகாதாரம், கல்வி, நிதி வசதி கள் முதலியவற்றை யெல்லாம் கவனித்து வருகின்றன. உலகில் மூன்றில் ஒரு பகுதியான நாடுகள், தொழில்கள் பெருகி, செல்வம் கொழித்து வளர்ந்துள் ளன: மூன்றில் இரு பகுதியான நாடுகள், தொழில் வளர்ச்சியின்றி, அறியாமையும் நோயும் பெருகித் தேங்கி நிற்கின்றன. ஐக்கிய நாடுகளின் சபை மேலும் வலுப்பெற்று, மேலும் அதிகாரங்கள் அடைந்து, எல் லாத் துறைகளிலும் உலகை அளாவிய திட்டங்களை மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பது பல அறிஞர்களுடைய கருத்து. இன்றுள்ள நிலையில் எந்தப் போரும் தனித்த சில நாடுகளுக்குள் நீடித்து நடக்க முடியாது. எதுவும் உலகப் போராகவே மூளும். அதே போலச் சில நாடுகள் மட்டும் அமைதியாக வாழவும் முடியாது. சமாதானமும் உலகனைத்திற்கும் பொது வாகவே நிலவி நிற்கும். மக்களின் ஆரோக்கியம், கல்வி முதலியவையும் அப்படியே. அபாயகரமான ஆயுதக் குவிப்பு இந்நிலையில் 1962-ஆம் ஆண்டில் மட்டும் உலக நாடுகள் போர்த் தளவாடங்களுக்கு 15,000 கோடி டாலர் செலவிட்டிருக்கின்றன. அதே சமயம் ஆக்க வேலைகளுக்கு மிக மிகச் சொற்பமாகவே செலவாகி, யுள்ளது. உலகில் பெரும் பகுதியினரான மக்கள் 356