பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 1914-இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளத் திபேத்துக்கு உரிமையிருந்தது. சீனப் பிரதிநிதி அதை ஆட்சேபிக்கவேயில்லை. மேலும் திபேத்து மற்ற நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருந்தது. சீனவில் கம்யூனிஸ்ட் அரசு ஏற்பட்ட பிறகு தான் திபேத்து பலாத்காரமாக முற்றிலும் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க, மக்மகான் எல்லைக் கோட்டை ஒப்புக்கொள்ளும் அதிகாரமே திபேத்துக்கு இருந்ததில்லை என்று சீன அதிகாரிகள் வாதித்தனர். ஆனால் அவர்கள் சமர்ப்பித்த திபேத்திய தஸ்தாவே ஜுகளின்படியே திபேத்து வெளி நாடுகளுடன் எல்லைகள் பற்றி ஏற்பாடு செய்துகொண்டதும், சீனர்கள் இல்லாமலே திபேத்தியப் பிரதிநிதிகள் தம் விவகாரங்களை வெளியார்களுடன் பேசி, விவாதித்து, முடிவு செய்து கொண்டதும் காணப்பட்டன.

பிரிட்டிஷார் காலத்திய இந்தியத் தஸ்தாவே ஜூகளைச் சீன அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ஏனெனில் பிரிட்டிஷார் ஏகாதிபத்தியவாதிகளாம்! இதற்காக இந்திய அதிகாரிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்திய தஸ்தாவேஜ-சகளையும், பிரிட்டிஷாருக்கு எதிரிகளாக விளங்கிய பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், இத்தாலியர் முற்காலத்தில் வைத்திருந்த ஆதாரங்களையும், சீனத் தஸ்தாவே ஜூகளிலிருந்த ஆதாரங்களையும்கூட எடுத்துக் காட்டினர்.

இரு பக்கத்து அதிகாரிகளின் விவாதங்களின் நடுவே, சீனா பர்மாவுடனும், நேப்பாளத்துடனும் எல்லை ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அடிக்கடி சீன அதிகாரிகள் எடுத்துப் பேசினர்கள். ஆனால் பர்மாவிலும், நேப்பாளத்திலும் நிலப்பரப்பில் 10 ஆயிரம், 50 ஆயிரம் சதுர மைல்களைச் சீனா தனக்குரி

இ. சீ. பா.—3
33