பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/371

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொதுவாகப் போர் வாசனையே இல்லாத சாதுக்க' ளான இந்திய மக்களையும் போர் வெறிகொள்ளச் செய் துள்ளது. பாதுகாப்பெல்லாம் சரியா யிருக்கு மென்று எச்சரிக்கைக் குறைவா யிருந்த பார்லிமென்டும், மற் றச் சட்ட மன்றங்களும் விழிப்படையச் செய்ததும் அதுதான். தன் நிலையைச் செம்மையாக நிலைநிறுத் திக் கொள்ளாமல், இந்தியா, உலக சமாதானம் பற்றி யும், மூன்ருவது உலகப் போர் தோன்றி விடாம லிருக்க வேண்டுமே என்பது பற்றியும் கவலை கொள் வது வீணென்றும் அது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக்கி விட்டது. அடுத்த உலகப் போரைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பை ஆண்டவன் இந்தியா வின் தலைமீது மட்டும் சுமத்தி யிருக்கவில்லை! சீனப் போராட்டத்தினல் நம் நண்பர்கள் எவர் கள், பகைவர்கள் எவர்கள், இந்தியாவின் உதவிகளை முன்னல் பெற்றுக் கொண்டு, ஆபத்து வேளையில் அதற்கு அநுதாபம் கூடக் காட்டாதவர்கள் எவர்கள் என்பதையெல்லாம் நாம் கற்றுக் கொண்டிருக்கிருேம். நமது உண்மையான நிலையை நாம் உணர்ந்து, நம் குறைகளை நீக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக் கின்றது. முன்னல் நம் உதவியையும், அதுதாபத்தை யும் பூரணமாகப் பெற்றிருந்த சீன தான் முதுகுப் புறமாக நம்மைக் குத்தியது. நம் உதவிகளைப் பெற்று வந்த சுகர்ளுேக்களும், நக்ருமாக்களும், சிரிமாவோக்களும், சீன தான் அக்கிரமமாகப் படையெடுத்தது என்று கூடச் சொல்லத் துணியவில்லை. பாண்டுங் மகாநாட் டிலும், மோஹி மகாநாட்டிலும் ஆப்ரோ-ஆசிய நாடு கள் என்று நாம் உறவு கொண்டாடிய நாடுகளிற் பலவும் மெளனமா யிருந்துவிட்டன. பொதுவாகவே நம் அண்டை நாடுகள் சிலவற்றிடம் நம்மீது அன்போ, மதிப்போ இல்லே யென்பதை நாம் நினைவில் கொள்ளு 36 I