பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தல் நலம். சிறிய தீவான இலங்கை அங்கு குடியேறி யுள்ள இந்திய மக்களுக்குப் பலவிதத்தில் இடையூறு செய்யத் தயங்குவதில்லை. பர்மா அங்கு ஏராளமான நிலங்களைப் பெற்றிருந்த நம் மக்களிடமிருந்து அவை களைப் பிடுங்கிக்கொண்டு, அவர்களை விரட்டிவிட்ட தோடு, நம்மிடம் விசேடமான அன்பு கொண்டிருப்ப தாகவும் தெரியவில்லை. ஜப்பான நாம் முன்பு பல முறை கண்டித்து வந்தோம். அந்நாடும் சீன ஆக்கிர மிப்பை வன்மையாகக் கண்டிக்க முன்வரவில்லை. இந்தோனீஷியாவில் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது; சீனர்களும் பலர் உளர். அந்நாடு சீன அநுதாபமுள்ள நாடாகியிருந்து, சீனவின் கைக்கருவி யாகிவிட்டது. அது தானகச் சீனாவின் வாய்க்குள் போகிறதா, அல்லது சீனவே அதை விழுங்குகிறதா என்பதைத்தான் இனி பார்க்க வேண்டும். அமெரிக் காவும், பிரிட்டனுமே ஆபத்து வேளையில் முன்வந்து நம் மானத்தை ஒரளவு காப்பாற்றின : சில பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளும் நேசப்பான்மையுடன் உதவி யளித்தன. இந்தியா முழுதும் திக்குவிஜயம்' செய்து விட்டுச் சென்ற குருஷ்சேவின் ஸோவியத் ரஷ்யா நம் முடன் சேராவிட்டாலும், சீனவுடன் சேராமலிருந் ததே நம் பாக்கியம்தான் ! இந்திய வெளிநாட்டுக் கொள்கைகள் இந்த நிலையில் இந்தியா உடனேயே அமெரிக் காவைத் தலைமையாகக் கொண்ட வல்லரசுக் குழுவுடன் சேர்ந்துவிட வேண்டும் என்று நம்மில் ஒரு கூட்டத்தார் கூறுகின்றனர். அமெரிக்காவுடன் சேர்ந்தால், மீண்டும் சீன நம் நாட்டின் மீது படையெடுக்கவே அஞ்சும் என்பதும் உண்மைதான். இந்தியாவை அமெரிக்கா வுடன் சேரும்படி செய்வதே சீனவின் நோக்கமாயிருந் & & P \