பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தால் அந்த நோக்கத்தை நாமாகவே நிறைவேற்ற வேண்டுமா என்ற கேள்வி எழும். அமெரிக்காவுடன் .ே ச ர் ந் தே தீரவேண்டும் என்று இடைவிடாமல் செல்லிக்கொண்டிருக்கும் சிலருக்கு, போரில் வெற்றி தோல்விகள் ஒருபுறமிருக்க, முதலில் இந்தியாவில் கம்யூனிஸ்மோ,ஸோஷலிஸமோ இல்லாமல் ஒழிவதற்கு அது ஏற்றவழி என்பதும் இலட்சியமாயிருக்கும். சீன வைத் தவிர, ரஷ்யாவும், கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகளும் நமக்கு விரோதமாக இல்லை : சீனவின் போக்கையும் போர் வெறியையும் அவைகள் கண்டித்திருக்கின்றன. அவைகளுடன் ஆண்டுதோறும் நமக்குப் பொருளாதாரத் தொடர்பு அதிகரித்து வரு கின்றது. சில நாடுகள் நம் தொழில்களை நிறுவுவதற்கு நிபுணர்களை அனுப்பியும் உதவிவருகின்றன. இவை களைக் கைவிட்டுவிட்டு, நாம் எதிர் வல்லரசுக் குழாத் துடன் ஒரேயடியாய்ச் சேர்ந்துவிடுவது நலமா? எது எப்படியிருந்தாலும், இந்தியா ஏதேனும் வல்லரசுக் குழாத்துடன் சேருவதா யிருந்தால் அது அமெரிக்கக் குழாமாய்த்தான் இருக்கவேண்டுமென்று பலர் கூறு வர். ஏனெனில் அமெரிக்காவும், மேலை நாடுகளுமே இந்தியாவைப் போன்ற ஜனநாயகக் கொள்கையுள் ளவை. இந்தியாவுக்கும் மேலைநாடுகளுக்குமே அதிகத் தொடர்புண்டு. அமெரிக்காவின் நட்பையும்ரஷ்யாவின் நட்பையும் விடாமலிருப்பதே இந்தியாவுக்கு நலம். சீன இந்திய எல்லைப்புறத்தில் போர் தொடங்கிய வுடன், முதற் களபலியாகச் சுட்டுவீழ்த்தப்பட்டது கம்யூனிஸம்தான். சத்தியமே போரில் முதற் களபலி யா கு ம் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. சத்தியம் என்பது கம்யூனிஸ்ட் சீனவின் அகராதியி லேயே இல்லாத ஒன்று. ஆதலால் கம்யூனிஸத்தையே அது சுட்டுத் தள்ளிவிட்டது எனலாம். இதையே நமது 3 63