பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவிலும், பிறநாடுகளிலும், அந்தப் பெயர் இல்லாமலே நடந்திருக்கின்றன. அமெரிக்கா தொழில் வளம் பெருகிய நாடு. இந்தியா புதிதாகத் தொழில் வளர்த்து வரும் நாடு. இங்கு ஏழைகள் அதிக ஏழை மையில் அழுந்திவிடாதபடியும், செல்வர்கள் மட்டுமே மேலும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிராதபடி யும், வெகு வேகமாகத் தொழில்களைப் பெருக்கி உற் பத்தி செழிக்கும்படியும் செய்வதற்கு ஸோஷலிஸம் இன்றியமையாததாகும். இதை ஒரளவு முக்கியமான அமெரிக்க அரசியல்வாதிகளும் அறிந்திருக்கின்றனர். மேலும் ரஷ்யா முதலிய கம்யூனிஸ்ட் நாடுகளுடன் இந்தியா உடனே உறவுகளை அறுத்துக்கொள்வதும் நிலமில்லையென்று அவர்களிலே பலரும் ஒப்புக்கொள் கின்றனர். இதுவரை இந்தியா நடுநிலைமைக் கொள்கைஅதாவது கட்சி சேராக் கொள்கையைக் கடைப் பிடித்து வந்தது. ஆனல் சீனப் படையெழுச்சி காரண மாக ஒரு கட்சியிடம் கை நீட்டி ஆயுதங்களைப் பெற்ருகி விட்டது: இன்னும் பெறப் போகின்றது. மேலும் சீன, தனக்கு நட்பா யில்லாத நாடு விரோதிதான் என்று, ஆயுதம் தாங்கித் தாக்கவும் முற்பட்டது. "இனியும் என்ன நடுநிலைக் கொள்கை?' என்பது முறையான கேள்விதான். ஆயினும் பூரணமாக ஒரு கட்சிச் சார்பாக இறங்குவதைப் பார்க்கினும், இந்தியா போன்ற சில நாடுகளாவது தனித்திருந்தால், உலகப் போரைத் தடுக்க முயலலாம் என்றும், போர் தோன்றி விட்டால் அதை நிறுத்த உதவலாம் என்றும் நம் பிரதமர் நேரு நெடுங்காலம் நம்பி வந்தார். இத் துடன் ஒரு கட்சியுடன் இரண்டறக் கலந்துவிடுவ தால், ஆயுத உதவிகள் பெறுவது மட்டுமின்றி, நம் நாட்டிலே பிற நாட்டாருடைய விமான தளங்களும், 3 6.5