பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/376

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போர்ப் படைகள் தங்கு மிடங்களும் அமைக்க நேரும். நம் வெளிநாட்டுக் கொள்கையும், ஒரளவு உள்நாட் டுக் கொள்கையும், அக்கட்சியின் நோக்கத்திற்கே இசைவாயிருக்கும்; நம் நோக்கப்படி அவைகளை வைத் துக் கொள்ள இயலாமற் போகும் என்றும் நேரு அஞ்சினர் அமெரிக்காவோ, பிரிட்டனே, எங்க ளுடைய இராணுவ முகாமில் சேர்ந்தால்தான் உதவி செய்வோம்’ என்று சொல்லவுமில்லை. அவைகள் செய்கிற உதவிகள் யாவும் நம் எல்லோருடையபொது விரோதியை ஒழிப்பதற்கே பயன்படும் என்பதை அவைகளும் நன்குணர்ந்திருக்கின்றன. ரஷ்யா முதலிய ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகளும் இந்தியா அமெரிக்கக் குழாத்துடன் ஒரேயடியாக இணைந்து விடாமாலிருப்பதில் சிரத்தை கொண்டுள்ளன. உலகின் இரு வல்லரசுக் குழாங்களில் ஒவ்வொன்றும் இந்தியா எதிர்க் குழாத்துடன் சேர்ந்துவிடாமல் இருக்கவேண் டுமே என்பதில் சிரத்தை கொண்டிருக்கின்றது. இந்த நிலை நமக்கு ஒரு வலிமையாக விளங்குகின்றது. இனி நம் இராணுவ வலிமை பற்றிப் பார்ப்போம். போரில் சீனவுடன் நாம் எதிர்த்து நிற்க முடியும், அது நம்மிடம் பறித்துக் கொண்டுள்ள பிரதேசங்களையும் நாம் திரும்பப் பிடித்துக் கொள்ள முடியும் என்று நாம் நம்புகிருேம். நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய உணர்ச்சி வெள்ளத்தை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டால், விரைவிலே நாம் நமது இலட்சியத்தை அடைய முடியும். ஆனல் சீனவுக்குப் பதிலாக ஸோவியத் ரஷ்யா படையெடுப்பதாக வைத்துக் கொண்டால், நாம் சமாளித்து வெற்றி காண்பது கடினம். ஏனெனில் ரஷ்யா அவ்வளவு வல்லமை பெற் றுள்ள நாடு; அதன் இராணுவம் நவீன வசதிகள், ஆயுதங்கள் அனைத்தையும் பெற்றுள்ளது. சீனவுடன் 366