பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/380

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கொள்ளல் இன்றியமையாதது. கல்லூரி மாணவர் களுக்கு இராணுவக் கல்வி அளிக்க வேண்டியதும் மிக மிக அவசியம். மாணவர்கள் பயில்கின்ற பூகோளம், சரித்திரம், விஞ்ஞானம், சமூகநூல் முதலியவற்ருேடு மிகவும் பொருந்துவதாயுள்ள போர்க் கல்வி அவர் களுடைய மனப்பான்மையே நன்கு உருவாகி வளர் வதற்கு உதவியாகும். இம்மாணவர்களிலே மேலும் இராணுவ விஷயங்கள் தெரிந்துகொள்ள விருப்பமுள்ள வர்கள், அவ்வாறே கற்றுக்கொண்டு, இராணுவப் பயிற்சி பெறலாம் : அல்லது பயிற்சி பெருமலே, இராணுவ வரலாறுகளே ஆராய்ந்து புதிய புதிய தத்துவங்களை வகுக்க உதவி செய்யலாம். தற்காலத்துப் போர்முறைகள் பற்றிய ஆராய்ச்சி களுக்குத் தந்தையர் ' என்று கருதப்பெறும் கிளாஸ் விட்ஸ், ஜொமினி முதலியோர் எழுதியுள்ள நூல்களைப் படித்தால்கூட இளைஞர் எழுச்சி பெறுவர். கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் (1780-1831) ஜெர்மானியத் தளபதியா யிருந்தவர் : யுத்த சாஸ்திரம்பற்றி அவர் எழுதியுள்ள 10 தொகுதிகளாயுள்ள நூலே இப்பொழுது பல நாடு களிலும் இராணுவப் படிப்புக்கு அடிப்படையாயுள் ளது. சுவிட்ஜர்லாந்தில் தோன்றிய ஹென்றி அண்டா ஸின் ஜொமினி (1779-1869) ரஷ்யச் சக்கரவர்த்திக்கு இராணுவ ஆலோசகராக இருந்தவர். இராணுவத் தந்திரங்களே விளக்கிச் சொல்வதில் இவர் நிபுணர். இவர்களுக்குப் பின்னல் ஹெண்டர்ஸன், ஃபாக், காலின், மாரிஸ், லிட்டெல் - ஹார்ட், பர்ன், மாண்ட்கமெரி, மாக்லின் முதலிய பலர் போர்த் தத்துவங்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளனர். இந்நூல்களிலே பெரும்பாலானவை இந்திய மொழிகளிலே பெயர்க்கப்பட வேண்டும். உயர் தர இராணுவ விஷயங்களைக் கற்கும் இளைஞர்களுக்கு இவையெல்லாம் உற்ற துணையாகும். '**'. ←ᏰᏑ 9