பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொத்தத்தில் கிளாஸ்விட்ஸிலிருந்து, நெப்போலி யன், இரண்டு உலகப் போர்களின் தளபதிகள், சர்ச்சில் முதலிய அரசியல்வாதிகள் வரை யுத்தங் களைப்பற்றி எழுதி வைத்திருக்கும் நூல்கள் நவீனப் போரில் ஈடுபடுகிறவர்களுக்கு இன்றியமையாதவை. படைகளின் உற்சாகமும் உறுதியும் ஆயுத பலத் தைப்போல் மும்மடங்கு வலிமையுள்ளவை என்று நெப்போலியன் கூறியுள்ளார். போர்த் தலைவர்களுக்கு அரசாங்கத் தலைவர்கள் பக்கபலமாக இருப்பதுடன், அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் இருக்கவேண்டும் என்பதைப் பழைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர்ச்சில் வற்புறுத்திச் சொல்லியிருக்கிருர் எந்த நாடும் தற் காப்பு மட்டும் செய்து கொண்டு, எதிரிகளை வெல்லமுடி யாது. முதலில் அவசியப்படும் காலத்தில் பாதுகாப்புப் போரில் நின்றுகொண்டு, எதிரிகளைப் பலவீனப்படுத்தி அவர்கள் மீது படையெடுத்துத் தாக்கினல்தான் இக் காலத்துப் போர்களில் அவர்களே அழிக்கமுடியும். இதை அமெரிக்கத் தளபதியான பேட்டன் என்பவர் பின்கண்ட முறையில் விளக்கியிருக்கிருர் : எவரும் தற்காப்பின் மூலம் எதையும் காத்துக் கொண்டது கிடையாது. எதிரிகளை முன்னேறித் தாக்கவேண்டும், திரும்பத் திரும்பத் தாக்கவேண்டும். இதுதான் வெற்றி கரமான போராட்டமுறை. இத்தகைய கருத்துக்கள், அபிப்பிராயங்கள், தத்துவங்களை யெல்லாம் தெளி வாகப் புரிந்து கொண்டால்தான், நவீனப் போரை நன்கு நடத்த முடியும். ' | இராணுவ வல்லமையுள்ளது என்று ஒரு நாட் டைக் கூறவேண்டுமானல், அதற்கு மூன்று ஆற்றல் கள் அமைந்திருக்க வேண்டும். முதலில், போருக்கு வேண்டிய உற்சாகமும் உறுதியும் வேண்டும். அரசாங் கத்தை முறையாக நிர்வகித்துக்கொண்டு, நிலம், 37.2