பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நீர், வானம் மூன்றிலும் பேராடும் முப்படைகளுக்கும் தேவையான பொருள்கள் அனைத்தையும் தட்டாது அனுப்பிவரும் சக்தி வேண்டும். புகழ்பெற்ற ஜெர்மானி யத் தளபதியான ரோமல் என்பவர் இதை மிகவும் வற்புறுத் திச் சொல்லியுள்ளார். தலைசிறந்த தீரர்கள் கூடப் பீரங்கிகள் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. வெடிமருந்தும் குண்டுகளும் மிகுதியா யில்லாவிட்டால், பீரங்கிகளும் ஒன்றும் செய்ய இய லாது. போரில் துப்பாக்கிகள் சுடுவதற்குத் தொடங்கு முன்பே படைகளுக்குரிய சாமக்கிரியைகளை மேற் பார்த்து வரும் அதிகாரிகளே போரில் வெற்றி தோல்விகள் பற்றி முடிவு செய்து விடுகின்றனர்' என்பது அவர் வாக்கு. மூன்ருவதாக, .ெ த ா ழி ல் வளர்ச்சி குன்ருமல் பெருகிவரவேண்டும். இக்காலத்துப் போர் க ளி ல் ப ைட க ளி ன் வலிமையை அவற்றின் அளவைக் கொண்டு மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது ; அதிகமான எண்ணிக்கை யுடன், ஆற்றலும் அதிகம் வேண்டும். அந்த ஆற்றல், படைவீரர்களின் உள்ள வலிமையாலும், ஏராளமான தளவாடங்களாலும், சிறந்த போர்த் தந்திரங்களா லும் ஏற்படுவது. சென்ற உலகப் போரில் இவைகளைப் பெற்றிருந்த ஜெர்மனி 1940, 1941-இல் நேசநாடு க ளி ன் படைகளைப் பல இடங்களில் முறியடித்து விரட்ட முடிந்தது. அப்பொழுது அதனிடம் 136 டிவிஷன் படைகளும், 2,800 டாங்குகளுமே இருந் தன. நேசநாடுகளிடம் 156 டிவிஷன் படைகளும், 4,000 டாங்குகளும் இருந்தன. ஆனல் ஜெர்மனியிடம் விமானப்படையின் வலிமை அதிகம். அத்துடன் திடீர் திடீரென்று வேகமாகத் தாக்கும் ஆற்றலும், சிறந்த இராணுவ அமைப்பும், படைகளுக்கு முன்னல் பற்பல டாங்குகளே அனுப்பி எதிரிகளைத் தகர்க்கும் முறையும் 37.3