பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/385

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எடுத்துக் கொள்ளப்பட்டன. எஞ்சினியர் அளில் இந்தியாவுக்கு 61 பேர்களும், பாகிஸ்தானுக்கு இபேர்களும் எடுத்துக்கொள்ளப் பெற்றனர். போர் விமானப் படைகளில் இந்தியாவுக்கு 7-ம், போக்கு வரத்துக்குரிய விமானப்படையில் 1-ம் கிடைத்தன. படைவீரர்களில் முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகிஸ் தான் படைகளுடன் போய்ச் சேர்ந்துகொள்ள அநுமதிக்கப் பட்டனர். i சீனப்படையெடுப்பிற்கு முன்னல் நம் தரைப்படை களில் 5 லட்சம் வீரர்கள் இருந்துவந்தனர். விமானப் படையும், கப்பற்படையும், ஆண்டுதோறும் விஸ்தரிக் கப் பெற்று, வளர்ந்து வருகின்றன. சீனப்படையெடுப் புக்குப் பின்னல், நம் தரைப்படைகளே இரட்டிப்பாகப் பெருக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. போர்த் தளவாடங்களின் உற்பத்தியும் பெருகிவருகின்றது. போர் விமானங்களை விரைவிலே தயாரிக்கவும் ஏற்பா டாயிற்று. நம் புதிய ஆயுதங்களும், விமானங்களும் எப் படிச் செயலாற்றுகின்றன என்பதை நாம் பார்க்கவும் வாய்ப்பு வந்துவிட்டது. பாகிஸ்தான் போரில் அவை களைக் கண்டு மக்கள் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளனர். நமது முதல் எதிரியான சீன, கடந்த 13 ஆண்டுக் காலத்தில் மாபெரும் படைகளைத் தயாரித்துக் கொள்ள முடிந்தது என்ருல், இந்தியாவும் அதேபோல் செய்து கொள்ள முடியும். ஆனல் சீன போருக்காகவே எல்லாவற்றையும் தயாரித்துக் கொண்டிருந்தது : இந்தியாவோ போரே வரா தென்று நம்பிக்கொண் டிருந்தது. மக்களுக்கு வேண்டிய வசதிகளைக்கூடத் தியாகம் செய்து சீன படைகளையே பெருக்கிக்கொண் டிருந்தது. நம் நாட்டில் படைகளுக்காகச் செலவிடப் பட்ட தொகைகளே அதிகம் என்று நாம் குறை சொல்லிக் கொண்டிருந்தோம். & 75