பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/387

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கொஞ்சம் கொஞ்சமாகப் படைகளைப் பெருக்கிக் கொண்டு போவதற்கு இது காலமில்லை. சீனப் பகை வர்கள் நம் நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர். நாள் தோறும் சவால் விடுத்துக்கொண்டு நம்மை அவ மானப் படுத்தி வருகின்றனர். அவர்கள் பிடித்துக் கொண்ட பகுதிகள் அவர்கள் வசமே இருக்கின்றன. திடீரென்று மேற்கொண்டு பாய்ந்து வரவேண்டுமான லும், அவர்கள் வரலாம். நேப்பாளம், சிக்கிம், பூடான் நாடுகளைப் பிடித்துக்கொண்டு. நேபாவுக்குத் தெற்கே பிரம்மபுத்திரா நதியைக் கடந்து அஸ்ஸாமிலும், மேற்கு வங்காளத்திலும் அவர்கள் புகுந்துவிட முடியும். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை அவர்கள் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யலாம். நேபா போராட்டத்தின்போதே சீ ன ர் க ள் அஸ்ஸாம், வங்காளம் வரை ஏன் செல்லவில்லை என்பதே ஆச்சரியம் தான். நேபாவில் நாம் அடைந்த தோல்விகளையும், காட்டிய பலவீனங்களையும் அவர்களே ஒரு வேளை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் இந்தியாவுக்குள் நெடுந்துாரம் நுழைந்துவிட்டால், நீண்டகாலப் போரில் தப்பித்துக்கொண்டு மீண்டு செல்வது அவர் களுக்குக் கஷ்டமாகத் தோன்றி யிருக்கலாம். சீனவின் உள்நாட்டு நிலைமை பெரும் போருக்கு ஏற்றதா யில்லையோ என்னவோ ? ஆகையால் நாம் நீண்ட காலத்திற்கு ஏற்ற திட்டம் வகுத்து, விரைவிலே நம் தரைப் படைகளையும், விமானப் படைகளையும் பெருக் கிக்கொள்ள வேண்டும்; கடற் படையையும் விரிவாக் கிக்கொள்ள வேண்டும். - * பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு மி ைட யி ல் 3,000 மைல் நீளமுள்ள எல்லையையும், சீனவுக்கும் இந்தியாவுக்கு மிடையில் 2,500 மைல் நீளமுள்ள எல்லையையும் பாதுகாக்கும் பொறுப்பு சு த ந் த ர ვ 7 7