பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/388

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், காஷ்மீரில் முன்னல் 40,000 சதுரமைல் பிரதேசத் தைப் பிடித்துவைத்துக்கொண்டிருப்பதுடன், எஞ்சி யுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு என்று சொல்லப்பெறும் 40,000 சதுரமைல் பிரதேசத்தையும் தனக்கே கொடுத்துவிடும்படி கேட் கின்றது. கொடுத்து விட்டால், இந்தியா வசம் ஜம்மு (15,000 சதுரமைல் பகுதி மட்டுமே இருக்கும்! காஷ்மீர் பள்ளத்தாக்கையே நாம் பாகிஸ்தானுக்கு அளிப்பதானுலும் அது திரு ப் தி ய ைட ந் து ஒதுங்கி நிற்குமா ? சிறிது காலத்திற்குப் பின் வேறு பிரசினைகளைக் கிளப்பாம விருக்குமா ? மேலும் இப்பொழுது பாகிஸ்தான் நம் எதிரியான கம்யூனிஸ்ட் சீனுவுடன் மிக நெருக்கமான உறவுகொண்டு இரகசிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. இந்த உறவை உடனே அறுத் துக்கொண்டு, இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே ஆபத்தாக விளங்கும் சீனவுக்கு எதிராக அது நம் முடன் சேர்ந்து அணிவகுத்து நிற்குமா ?:பாகிஸ்தான் பொய்யும் ஏமாற்றுமே அரசியல் என்று நம்பி நம்மைப் பலமுறை ஏமாற்றிவிட்டது. 18:ஆண்டுக்காலமாக அது புரிந்த அக்கிரமங்களுக்கு அளவேயில்லை, நம் எல்லேப் புறங்களில் அது அட்டூழியம் செய்யாத நாளேயில்லை. அதை நம்பி நாம் என்ன உறவுகொள் வது ? மேலும் காஷ்மீர் யாருடைய சொத்து: யார் யாருக்குக் கொடுக்க முடியும்? இப்பொழுது பாகிஸ்தான் இந்தியாவுடன்போரே தொடுத்து விட்டது. சீன பின்புறத்தில் நின்று கொண்டு தூபம் போட்டுவருகிறது. இப்பொழுதும் இந்த இரண்டு நாடுகளையும் சமாளித்து நிற்க நாம் தக்க ஏற்பாடுகள் செய்துகொள்ளவேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. - --- --- 37.8