பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 விடுதல் சம்மதம் அல்லது தெளிவான அங்கீகாரத்தையே குறிக்கும்...'

1914இல் திபேத்தும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று இப்பொழுது சீன வாதாடுகின்றது. தன்னைக் கேளாமல் ஒப்பந்தம் செய்துகொள்ளத் திபேத்துக்கு அதிகாரமில்லை யென்பது அதன் கூற்று. மேலே குறித்துள்ள வழக்கில், ஒரு நாடு ஒப்பந்தமோ, உடன் படிக்கையோ செய்துகொள்ள மிக மிகக் குறைந்த அதிகார மிருந்தாலும் போதும் என்று சர்வதேச நீதித்தலம் கூறியுள்ளது. இதன்படி திபேத்தின் ஒப்பந்தம் செல்லத் தக்கதாகும்.

இரண்டு நாடுகள் தமக்கிடையே ஒர் எல்லையை அமைத்துக் கொள்ளும்பொழுது, நிலையானதும், முடிவானதுமான அமைப்பைப் பெறவேண்டும் என்பது முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும்’ என்றும் நீதித்தலம் குறித்திருக்கின்றது. இந்திய-திபேத்து எல்லைகள் நிலையானவை, முடிவானவை.

ஆகவே, இந்திய எல்லைகள் பற்றிச் சீனச் சக்கரவர்த்திகள் காலத்திலும், கோமிண்டாங் ஆட்சியிலும், கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்ட பிறகும் சீன ஆட்சேபம் எதுவும் கூறாமலிருந்துவிட்டு, பின்னால் இப்போது 2,400-மைல்களுக்கு மேல் நீளமுள்ள எல்லா எல்லைகளைப் பற்றியும் தகராறு செய்வதற்குச் சட்டப்படி அதற்கு உரிமை எதுவுமில்லை என்பது வெள்ளிடை மலை. வாயினா பேசினல் நாம் பதில் சொல்லலாம்: நீதித்தலத்தில் வழக்காடினால் நாம் வாதாட முடியும்; ஆனால் சீனா துப்பாக்கி முனையால் பேச முனைந்த பிறகு, நீதி, நியாயம், சட்டம் முதலியவற்றால் என்ன பயன்?

39