பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சீனாவின் ஆசைகள்

தேச பக்தர்கள், கொடுங்கோலர்களுடைய உதிரத்தை அடிக்கடி ஊற்றித்தான் சுதந்தர மரத்தை வளர்க்க வேண்டும். உதிரம்தான் அதற்கு இயற்கையான உரம்.'

—தாமஸ் ஜெபர்ஸன்

[1]


நன்றி கொன்ற நாடு

1962 அக்டோபர் 20-ந் தேதி கம்யூனிஸ்ட் சீனா நம் பாரத நாட்டின் மீது திடீரென்று படையெடுத்துவிட்டது! ஏராளமான பீரங்கிகள், டாங்குகள், இயந்திரத் துப்பாக்கிகள், மற்றும் கொலைக் கருவிகளுடன் அலையலையாகச் சீனப் படைகள் பாய்ந்து வந்தன. வடக்கே பகைவர் இல்லையென்று நாம் கருதியிருந்தோம். வட திசையிலுள்ள சீன நட்புரிமை கொண்ட நாடென்று நாம் நம்பியிருந்தோம். சீனாவுக்காக நாம் உலகறியப் பரிந்து பேசினேம். அது பல நாடுகளில் செய்துவந்த அதிக்கிரமங்களைக் கண்ட பின்னரும், காணாததுபோல், கண்களே மூடிக்கொண்டோம். எல்லைகள் பற்றிச் சமாதானம் பேசுவதற்குச் சீனா நம்மை அழைத்தது. சமாதான மகாநாட்டுக்கு நாம் ஆயத்தம் செய்துகொண்


  1. அமெரிக்க ஜனதிபதி(1743-1826)

40