பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 படி பெரிய பெரிய பீரங்கிக் குண்டுகளை அவர்கள் பாய்ச்சினர். இதுவும் காலத்தின் கோலம்தான்!

‘சீன அரக்கன் உறங்கிக் கொண்டேயிருக்கட்டும். அவனை எழுப்பி விடவேண்டாம்!’ என்று பிரெஞ்சு வீரன் நெப்போலியன் முன்னால் சொல்லியிருந்தான். நெடுந்துயிலில் ஆழ்ந்திருந்த அந்த அரக்கன் இப்பொழுது விழித்தெழுந்து விட்டான்! அளவிலும், ஜனத்தொகைப் பெருக்கத்திலும் சீனா அரக்கன்தான். ஆனால் குணத்திலும், செயலிலும் அரக்கனே என்பதையும் அது காட்டிவிட்டது. அரக்கனுக்கு இரக்கம் கிடையாது, தர்மம் கிடையாது, நியாயம் கிடையாது, சத்தியம் கிடையாது. அவன் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள, எதையும், எங்கும், எப்பாேதும் செய்யலாம்! எத்தனையோ அரக்கர்களைப் பற்றிப் புராணங்களிலும் கதைகளிலும் படிக்கிறாேம். ஆயினும் இந்தப் புதிய கம்யூனிஸ்ட் சீன அரக்கன், செஞ்சட்டை அணிந்து, கைகளிலும் முகத்திலும் மக்களின் சிவப்பு உதிரத்தைப் பூசிக்கொண்டு, பயங்கரமாகக் காட்சியளிக்கிருன்!

கலகமே தொழில்

1947இல் இந்தியா சுதந்தரம் பெற்றது. 1949 இல் சீனவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஏற்பட்டது. அது முதலே அது அக்கிரமங்கள், ஆக்கிரமிப்புக்கள், மிரட்டல்கள், சதிகள், சண்டைகள் செய்யத் தொடங்கி விட்டது. இந்தியர் 47 கோடி, சீனர் 65 கோடி. நாம் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் கைகோத்துக் கொண்டு உலகம் முழுதும் அமைதியை நிலைநாட்ட உழைக்க வேண்டும் என்று நாம் கூறி வந்ததில், சீனர்கள் முதலில் நம்மிடத்திலேயே தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.

42