பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 மூன்றாவது உலகப் போர் மூண்டுவிடாமலிருக்க வேண்டுமே யென்று எல்லா நாடுகளும் அஞ்சி நிற்கின்றன. இந்நிலையில் ‘பாரகம் அடங்கலும் பயப்பிணி அறுக’ என்ற கொள்கையை நிலைநாட்ட நாம் முயன்று வருகிறாேம். ஆனால் சீனா, உள்நாட்டில் லட்சக்கணக்கான மக்களை வதைத்தும், அருகிலுள்ள நாடுகளிலெல்லாம் கலகங்களைக் கிளப்பிப் பெரும் போர்களை நடத்தியும், ஆங்காங்கே இரத்த ஆறுகள் ஒடும்படி செய்து வருகின்றது.

நம்மீது படையெடுத்து வருமுன்பு, சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் முதன் முதலில் உள்நாட்டு மக்களே வதைத்து ஒடுக்கிப் பயிற்சி பெற்றுக் கொண்டது. தொடக்கத்தில் மக்களுக்கு நன்மைகள் செய்வது போல் காட்டிக் கொண்டது. ஒரேயடியாகக் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தப் போவதில்லை யென்றும், எல்லாக் கட்சிகளும் சேர்ந்ததே ‘சீன மக்களின் குடியரசு’ என்றும் சொல்லிக்கொண்டது. நாடு முழுதும் தன் வலையை விரித்து முடித்தவுடனேயே, அது பெரிய நிலக்கிழார்களையெல்லாம் ஒழிக்க முற்பட்டது. குடியானவர்களைத் தூண்டி விட்டுத் தான் செய்ய வேண்டிய கொடிய வேலையை அவர்கள் மூலமே நிறைவேற்றிக்கொண்டது. பிறகு குடியானவர்கள் எல்லோருக்கும் விளை நிலங்களைப் பகிர்ந்து கொடுத்தது. உடனேயே அவைகளைப் பறித்துக் கொண்டு, கூட்டுப் பண்ணைகள், குடியானவர்களின் கூட்டுக் குடியேற்றங்கள் ஆகியவற்றை நிறுவிவிட்டது. ‘புரட்சியின் எதிரிகள்’ என்றும், ‘கட்சியின் பகைவர்கள்’ என்றும் பட்டம் சூட்டி, இலட்சக்கனக்கான சீனர்களைக் கொலை செய்தும், சிறையிலிட்டும், அடிமைகளைப்போல் கட்டாய வேலைகளுக்கு அனுப்பியும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் தன் நிலையைப் பலப்

43