பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 படுத்திக் கொண்டுள்ளது. இருபது லட்சத்திற்கு மேற்பட்ட எதிரிகளையும், கொள்ளைக்காரர்களையும் தீர்த்துக் கட்டிவிட்டதாகச் சீனப் பொருளாதார மந்திரியே 1952இல் ஒப்புக்கொண்டார். ஆனால் மாண்டவர்களின் தொகை இதற்குக் கூடுதலாகவே இருக்கும். இவ்வாறு 65 கோடிச் சீன மக்கள் அனைவரின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கைக்குள் அடங்கிவிட்டது. அக் கட்சியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாஸே-துங், லியு ஷெள-சி, சூ என்-லாய் முதலிய சில தலைவர்களைக் கொண்ட சிறு தலைமைக் குழுவின் கையிலிருக்கின்றது. மா-கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்; லியூஅரசாங்கத் தலைவர்; சூ-முதன் மந்திரியாக விளங்குகிறார். பீகிங் தலைநகரிலிருந்து கொண்டு இவர்கள் சதித் திட்டங்களை வகுத்துக் கொண்டே யிருக்கின்றனர்.

முதலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சரிக்கட்ட வேண்டும். மற்ற ஆசியச் சிறு நாடுகளை வளைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை மட்டம் தட்ட வேண்டும். ஆசியாவின் தலைமைப் பதவியைச் சீனாவே தனியாக வகிக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளிலும் தென் அமெரிக்க நாடுகளிலும் பிரசாரம் செய்தும், கலகங்களைத் தூண்டியும், புரட்சிகள் செய்ய வேண்டும். சீனாவுக்குக் கம்யூனிஸத்தைக் கற்றுக் கொடுத்து, அளவற்ற ஆயுதங்களையும், விமானங்களையும், இயந்திரங்களையும், கோடிக் கணக்கான பொருளையும் அளித்து, பெரிய தொழிற்சாலைகள் அமைத்துப் பொருளுற்பத்தி செய்ய வழிகாட்டிய இலட்சக்கணக்கான தொழில் நிபுணர்களையும் அளித்தது ஸோவியத் ரஷ்யா. அந்த ரஷ்யாவையே தக்க சமயத்தில் காலைத் தட்டிவிட்டு, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்

44