பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தானே தலைமை வகித்து நடத்தவேண்டும் என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம். மேலும் சீனா வுக்குச் சொந்தமான ஹாங்காங் தீவைப் பிரிட்டனிடமிருந்தும், மாக்கோ துறைமுகத்தைப் போர்ச்சுகீசியரிடமிருந்தும் திரும்பப் பறித்துக்கொள்ள வேண்டும். தனக்கு எதிராகச் சீனத் தேசிய அரசாங்கம் ஒன்றை ஃபார்மோஸா தீவில் அமைத்து ஆதரித்துவரும் அமெரிக்காவையும் எதிர்க்கவேண்டும். மூன்றாவது உலகப் போரை விரைவிலே தொடங்க வேண்டும். அமைதிக்கு இடம் கொடுப்பது கோழைத்தனம், பிற்போக்கு! உலகமெங்கும் போர்களும் புரட்சிகளும் நடந்து கொண்டே யிருக்கவேண்டும்! இத்தனை நோக்கங்களையும் கொண்டு இறுமாப்புடன் பீகிங் தலைநகரில் வீற்றிருக்கின்றது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு.

மலாய் நாட்டின் மீட்சி

இந்தியாவுடன் நிலத் தொடர்புள்ள கீழைநாடு பர்மா. பர்மாவுடன் தொடர்புள்ளது தாய்லாந்து. தாய்லாந்துக்குத் தெற்கே, கோடியிலுள்ளது மலாய் (மலேயா). அது மூன்று புறம் கடலால் சூழப்பெற்ற வளம் பொருந்திய நாடு. அதன் தென் முனையில் தான் சிங்கப்பூர் இருக்கின்றது. மலாயில் 32 லட்சம் மலாய் மக்களும், 26 லட்சம் சீனர்களும், சுமார் 6 லட்சம் இந்தியர்களும் வாழ்ந்து வருகின்றனர். செல்வம் கொழிக்கும் அந்நாடு பன்னிரண்டு ஆண்டுகட்கு மேலாகக் கம்யூனிஸ்டுகளின் கொலைகள், கொள்ளைகள் முதலிய அட்டுழியங்களால் பரிதவித்து வந்தது. கம்யூனிஸ்டுகள் பெரும் படையாக அணிவகுத்து வராமல், சிறு சிறு கொரில்லாப் படைகளாகப் பிரிந்து, காடுகளிலும் மலைகளிலும் மறைந்திருந்து,

45