பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கொரியாவில் போராட்டம் !

சீன ராஜ்யத்தைச் சேர்ந்த மஞ்சூரிய மாகாணத்தை ஒட்டியுள்ளது கொரியா. அங்கு மூன்று கோடி மக்கள் வசிக்கின்றனர். ஜப்பானின் ஆதிக்கியத்திலிருந்த அந்நாடு, போர் முடிவில்தான் விடுதலை பெற்றது. அதன் வட பகுதியிலிருந்த சுமார் 90 லட்சம் ஜனங்கள் கம்யூனிஸ்ட் ஆதிக்கியத்தில் தனி அரசு ஏற்படுத்திக் கொண்டனர்; தென் பகுதியிலிருந்த 210 லட்சம் மக்கள் சுயேச்சையாகத் தேசிய அரசாங்கத்தை நிறுவிக்கொண்டனர். 1950, ஜூன் 25-ந்தேதி திடீரென்று வடகொரியா தென்கொரியா மீது படையெடுத்துப் போர் தொடுத்தது. அந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உடனே அந்நாட்டில் தலையிட்டு, பொதுவான தன் படையை அனுப்பிச் சண்டையை நிறுத்தி, ஆக்கிரமிப்பை ஒடுக்கத் தீர்மானித்தது. சீனா ஏராளமான ஆயுதங்களுடன், இரண்டு பெரிய படைகளை வடகொரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது. அதாவது, அமைதி காக்க வந்த ஐக்கிய நாடுகளின் படையை எதிர்த்துச் சீனப் படைகள் போர்க்கோலம் பூண்டு வந்துவிட்டன! ஐக்கிய நாடுகளின் சார்பில் அமெரிக்கப் படைகளும் போரில் கலந்துகொண்டன. ஈராண்டுகள் கடும் போர் நடந்தது. மலைமலையாகப் பிணங்கள் குவிந்தபின், சமாதானம் ஏற்பட்டது. கொரியா வடநாடு, தென்னாடென்று இரண்டு பிரிவாகப் பிளவுபட்டுப் போயிற்று. வடக்கே சீனக் கம்யூனிஸ்டுகள் தங்கள் பொம்மை சர்க்காரை வைத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிருர்கள்!

வியட்னாமிலும் குழப்பம்

சீனவின் தென் எல்லையில் வியட்னாம் உள்ளது. ‘இந்தோ சைனா’ என்பது இதன் பழைய பெயர். இந்

48