பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நாட்டின் பரப்பு. 2,70,098 சதுர மைல்; ஜனத்தொகை சுமார் 3 கோடி. இது வடக்கு வியட்னாம், தெற்கு வியட்னாம், கம்போடியா, லாவோஸ் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. சீனா வடக்கு வியட்னமைத் தயார் செய்து கம்யூனிஸ்ட் மயமாகச் செய்துள்ளது. வியட்னாமில் வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடைவிடாத போர்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அமெரிக்கா தென் பகுதிக்கு உதவியாகச் சென்றுள்ளது. வழக்கம்போல் சீனா கம்யூனிஸ்ட் பகுதியான வடக்கு வியட்னாமுக்கு உதவி செய்து வருகின்றது.

பர்மாவில் சீனர் செல்வாக்கு

இலட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வந்த பர்மாவிலும் சீனா சில பகுதிகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. பல விதமாக உருட்டியும் மிரட்டியும் பர்மாவுடன் தன் எல்லைகள் பற்றி ஒர் உடன்படிக்கையும் செய்துகொண்டிருக்கின்றது. பர்மாவில் சுமார் 5 லட்சம் சீனர்கள் வசிக்கின்றனர். பர்மாவின் அன்பும் ஆதரவும் சீனாவின் பக்கமே இருந்து வருகின்றன. பர்மிய அரசாங்கத்தின் கொள்கையால் அங்குள்ள நம் மக்கள் சொத்துக்களையும் சுகங்களையும் முன்பே இழந்திருக்கின்றனர். அவர்களில் பலர் இந்தியாவுக்குத் திரும்பி வரவும் நேர்ந்தது. பர்மியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஒரு பகுதியும் சீனரின் செல்வாக்கிலுள்ளது.

இந்தோனீஷியாவின் தடுமாற்றம்

மலாய் நாட்டைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும் ஜாவா, சுமத்திரா, போர்னியோ, ஸெலிபீஸ், மற்றும் பல சிறு தீவுகளும் சேர்ந்தது இந்தோனீஷியா 21 லட்சத்திற்கு மேற்பட்ட சீனர்களும் இங்கே குடியேறி வசித்து வரு

இ. சி. பா.—4
49