பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இரண்டாவது : அனாக்கிரமிப்புக்குப் பதிலாக, எல்லைப்புறங்களில் அடிக்கடி துப்பாக்கிகளை உபயோகித்துக் கொலைகள் செய்தும், நம் காவற் படைவீரர்களைத் தூக்கிச் சென்றும் திருவிளையாடல்கள் புரிந்ததோடு, சீனா ஆக்கிரமிப்புப் போரிலும் குதித்து விட்டது.

மூன்றாவது : நம் உள்நாட்டு விவகாரங்களில் முழு மூச்சுடன் சீனா இறங்கியுள்ளது. இந்தியா வல்லரசுகளின் கைப்பதுமை யென்றும், ஏகாதிபத்திய வெறியர்களுக்கு வால் பிடிப்பதென்றும் கூறி, மற்ற வெளி நாடுகளுடன் நாம் நம் விருப்பப்படி கொண்டுள்ள உறவுகளைத் துாற்றி வருகின்றது. ஜனநாயக முறையில் அமைந்துள்ள நம் குடியரசை ஏளனம் செய்கின்றது. நம் ஜனநாயகத்தை அழித்துத் தன்னுடைய கம்யூனிஸ்ட் யதேச்சாதிகார ஆட்சிக் கொள்கையை நம்மீது திணிக்க அது இடைவிடாமல பற்பல வழிகளில் வேலை செய்து வருகின்றது. ஏராளமான ஒற்றர்களையும், இந்தியாவில் வசிக்கும் சீனர்களிலே பலரையும், இந்தியக் கம்யூனிஸ்டுகள் சிலரையும், மற்றும் துரோகிகளையும் அது பயன்படுத்தி வருகின்றது.

நான்காவது : சமத்துவத்தைச் சீனா குழிதோண்டிப் புதைத்துவிட்டது. தானே மேலென்றும், இந்தியா இழிவானதென்றும் கூவிக்கொண்டு வெறி பிடித்துக் கூத்தாடுகின்றது, பரஸ்பர உதவி என்பது பரஸ்பரப் போராக மூண்டுள்ளது.

ஐந்தாவது : சமாதானமான சக வாழ்வு என்ற உன்னதமான கொள்கையை ஸோவியத் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ நாடுகளும், ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளும் ஒன்றுக்கொன்று பகையும் சண்டையுமின்றி வாழ முடியு

52