பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கெளரி சங்கர்

இமாலயச் சிகரங்களில் ‘எவரெஸ்ட்’ என்று புகழ் பெற்ற கெளரிசங்கர் சிகரம் 29,028 அடி உயர முள்ளது. இதைத் திபேத்தியர் உலக மாதா என்று அழைப்பர். வையகத்திலேயே இதற்கு ஈடுமில்லை, எடுப்புமில்லை. இதன் உச்சியைக் கண்டு வெற்றி பெற வேண்டுமென்று பலர் பல்லாண்டுகளாக முயன்று வந்தனர். இதில் ஏறினோர் பலர், திரும்பி வந்தவர் சிலரே. இதன் ஐந்தரை மைல் உயரத்தையும் கடந்து உச்சியைக் காண்பது அரிது என்னும்படி, இந்த வெள்ளிப் பனிவரை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது.

33 ஆண்டுகளாக 11 கூட்டத்தார் அரும்பெரும் முயற்சிகள் செய்து, இதில் ஏறிப் பார்த்தனர். இவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்; இரண்டு முறை மட்டும் ஸ்விட்சர்லாந்து வீரர்கள் படையெடுத்துப் பார்த்தார்கள். செங்குத்தான பாறைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், பனியாலும், மழையாலும், பனிப்புயலாலும் கணந்தோறும் மாறிமாறிக் காட்சியளிக்கும் குன்றுகள் ஆகியவற்றை யெல்லாம் தாண்டிச் செல்வது செயற்கரும் செயலாகும். பனிக்கட்டிப் பாறைகளின் மீது பாதை கிடையாது. ஏறுவோர் பனிக்கட்டியில் தாமே கோடரியால் வெட்டிப் பாதையமைத்துக்கொள்ள வேண்டும். இடையில் சிறிது வெய்யில் அடித்தால், பனிக்கட்டி உருகிப் பாய்ந்து வெட்டிய பாதையை விரைவிலே அழித்துவிடும். உயரே போகப்போகக் காற்று மென்மையாகி, மனித உயிருக்கு வேண்டிய பிராணவாயு குறைவாக இருக்கும். பிராணவாயு முதல், உணவுப் பொருள்கள், நடுக்கும் குளிருக்கு ஏற்ற உடைகள், மற்றும் தேவையான கருவிகள் முதலிய எல்லா

2