பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 விஷயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துவிடும் என்றும் சீனா கனவு காண்கின்றது.

3. ஆசியாவில் வல்லமையும், பெருமையும் கொண்டு தலைமையாக விளங்கும் மூன்று நாடுகள் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை. ரஷ்யாவின் ஒரு பகுதி ஐரோப்பாவைச் சேர்ந்திருப்பினும், அது மேலே நாடுகளுடனேயே ஓயாமல் பொருதிக் கொண்டிருக்க நேர்ந்திருப்பினும், கீழ்த்திசையிலும் அதற்குச் செல்வாக்கு இருக்கின்றது. அந்தச் செல்வாக்கைத் தட்டிக் குறைக்க வேண்டும். அடுத்தாற்போல், சுதந்தரம் பெற்றதிலிருந்து வேகமாக முன்னேறி, உலக அரசியல் விவகாரங்களில் புகழ்பெற்று வளர்ந்து வரும் இந்தியா ஆசியாவின் தலைமைப் பதவியை வகிக்காதபடி தடுக்கவேண்டும். கோடி கோடியாக வெளி நாடுகளின் கடன் உதவிகளுடன், ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் இந்தியா பொருளாதாரத்தில் பெரிய அளவில் அமைதியாக முன்னேறி வருகின்றது. முன்பு கண்டறியாத அளவில் அணைகள் கட்டப் பெறுகின்றன. ஆலைத் தொழில்கள் வளர்ந்தோங்கி வருகின்றன. தொழிற்சாலைகள் அமைக்க ரஷ்யர்களும், ஜெர்மானியர்களும், மற்றும் பிற நாட்டார்களும் இந்தியாவுக்கு வந்து பணியாற்றுகிறார்கள். விவசாயத்திலும், தொழில்களிலும் இந்தியா அளவற்ற வேகத்துடன் முன்னேறுவதற்குரிய காரணங்களில் முதன்மையானது அமைதி — அதாவது போர் இல்லாமை. இந்தியாவைப் போருக்கு இழுக்க வேண்டும். கோடிக் கணக்கான மக்களைப் போருக்குப் பயிற்சி செய்வதிலும், புத்தம் புதிய போர்க் கருவிகளுக்காகக் கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிப்பதிலும், முக்கியமான பெரிய தொழில் ஸ்தாபனங்களை யெல்லாம் யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்

56