பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 வதற்குத் திருப்புவதிலும், மக்கள் யுத்தத்தினல் அவதிப்படுவதைத் தடுப்பதிலும் இந்தியா தன் பொருளையும் கருத்தையும் திருப்பும்படி செய்ய வேண்டும். 1962 வரை பதினைந்து ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க ஒரு போர்கூட இல்லாமல், இந்தியா செல்வத்தையும் சிந்தனையையும் உற்பத்திப் பெருக்கம் ஒன்றிலேயே செலுத்தி வருவதை மாற்றவேண்டும். இதற்கு ஏற்ற வழி போர்தான் என்று சீனா கருதியிருக்க வேண்டும்.

4. இந்தியா தன் படைகளுக்குப் புத்தம் புதிய கருவிகளையும், இயந்திர சாதனங்களையும் போதிய அளவு அமைத்துக் கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான மைல் நீளமுள்ள எல்லைகளிலும் போதிய பாதுகாப்புக்களை அமைக்கவில்லை. தனக்கு எதிரிகளே இல்லையென்று கருதிக் கொண்டிருந்தது. சீனா கொடிய பகைவன் என்பதை உணராமல், உற்ற நண்பனென்று கருதி, கொஞ்சிக் குலாவித் தேன்பிறை கொண்டாடி வந்தது. சீனா இந்தியாவைத் தாக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கையில், இந்தியா சீனவுக்காக வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகளில் வாதாடிக் கொண்டிருந்தது. இவ்வளவு ஏமாந்திருக்கும் சமயத்தில் தானே இந்தியாவைத் தாக்க வேண்டும் !

5. இராணுவச் சீரமைப்பிலும், பாதுகாப்பிலும் முழுக் கவனத்தையும் செலுத்தாமலிருந்த இந்தியாவை மின்னல் வேகத்தில் திடீரென்று தாக்கி, இந்தியா வெறும் கத்தரித் தோட்டத்துப் பொம்மை என்று காட்டவேண்டும். ‘மாபெரும் உபகண்டமான இந்தியாவுக்கே இந்தக் கதியானல் மற்றவைகள் எம் மட்டு!’ என்று ஆசிய நாடுகளும், ஆப்பிரிக நாடுகளும் சீனாவைக் கண்டு கதிகலங்கி, அதன் போக்குக்கெல்லாம் இசைந்தும் பணிந்தும் நடந்து வரவேண்டும்.

57