பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 6. சீனாவில் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரம் நடந்து வருகின்றது. கம்யூனிஸ்ட் தலைமைக் குழு தான் நினைத்ததை யெல்லாம் எதிர்ப்பின்றி உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். அதனால் அந்நாட்டில் கோடிக் கணக்கான மக்களைத் தூண்டியும், போதனை செய்தும், எத்தனையோ வேலைகள் நடந்து வருகின்றன. இருபது வருட வேலையை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும் என்பது அக்கட்சியின் அறைகூவல். ஆனால் இந்தியா ஜனநாயக நாடு. டில்லியில் மத்திய அரசாங்கத்தில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஜனநாயகமே நடைபெறுகின்றது. நகரங்களிலும், கிராமங்களிலும் கூட நகர் மன்றங்கள், பஞ்சாயத்துச் சபைகளில் நாம் மக்களின் ஆட்சியான ஜனநாயகத்தையே மேற்கொண்டிருக்கிறாேம். இந்த ஜனநாயக அமைப்பையே தகர்த்துக் காட்ட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் சீனா கருதியிருக்கலாம். சீனா மட்டும் கம்யூனிஸ்ட் கொள்கையை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் போதாது. வேறு பல நாடுகளும் அதேகொள்கையுடன் அதைச் சூழ்ந்து நின்று முட்டுக் கொடுத்து வர வேண்டும். அந்த நோக்குடன் கவனித்தால், இந்தியா மீது சீனாவின் படையெடுப்பு என்பதற்குப் பதிலாக, ஜனநாயகத்தின்மீது கம்யூனிஸ்த்தின் படையெடுப்பு என்று கூறினல் அதிகப் பொருத்தமாகும்.

7. பழைய சீனச் சக்கரவர்த்திகளிலே சிலர், அண்டை அயல் நாடுகளைப் பிடித்து ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்து ஆட்சி புரிவதில் ஆர்வம் கொண்டு, அவ்வாறே நடத்தி வந்தனர். அக்காலத்தில் சீனப் படைகள் எல்லைப்புறங்களில் போராடிக்கொண்டேயிருக்கும். இதுதான் இராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஆசை, அல்லது ஏகாதிபத்திய வெறி. இந்த ஆசை மண்ணுக்குள் மறைந்து போன மன்னர்களோடு நிற்

58