பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காமல், சீனப் புரட்சிக்கு வித்திட்டு வளர்த்த தலைவர் ஸன் யாட்-லென்னுக்கும் இருந்ததென்று அவர் நூலைப் படித்தால் தெரிகின்றது. அவருக்குப் பின்னல் தலைமைப் பதவியிலிருந்த சியாங் கே-ஷேக்கும் அதே கருத்துடையவர். அவருக்குப் பின் வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களும், சீனா எந்தக் காலத்தில் எந்தெந்த நாடுகளை யெல்லாம் பெற்றிருந்ததோ, அவைகளை யெல்லாம் ஒன்றுவிடாமல் மறுபடி பிடித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில் வியப்பில்லை. மேற்கொண்டு புது நாடுகளிலும் ஆதிக்கியம் வைத்துக் கொண்டால்தான் இரத்தக்கறை படிந்த தங்கள் கொடியை ஒரு கண்டம் முழுதும் பறக்கவிட முடியும்!

காலம் மாறிவிட்டது. ஆசியாவிலும், ஆப்பிரிகாவிலும், எங்கும் சுதந்தரம், சமத்துவம் என்ற கோஷங்கள் வானைப் பிளக்கின்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னல், ஒவ்வொரு குடியேற்ற நாடும் வீறுகொண்டு விடுதலை பெற்றுத் திகழ்கின்றது. 1945 முதல் பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இந்தோனேஷியா, இலங்கை, வியட்னாம், கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகள் சுதந்தரம் பெற்றன. மத்தியக் கிழக்கில் ஸிரியாவும், லெபனானும் பிரெஞ்சுக்காரரின் பிடியிலிருந்து விடுதலை பெற்றன. எகிப்து 1953-இல் ஆங்கிலத்துருப்புக்களை அறவே அகற்றிப் பூர்ண விடுதலையடைந்தது. 1955-இல் ஸ்-டானும், 1956-இல் டுனிவியாவும், மொராக்கோவும், 1957-இல் கானுவும் சுயாட்சி பெற்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கியத்தைக் கீழ்த் திசையிலே எங்குமில்லாதபடி ஒழிக்க வேண்டுமென்று பல்லாண்டுகளாகக் கூவி வந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது தானே தன் இராஜ்ய விஸ்தரிப்பிலும், பிற நாடுகளைப் பிடித்துச் சீன ஏகாதிபத்தியம் அமைப்பதி

59