பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 லும், ரஷ்யாவின் தலைமையிலும், வல்லரசுகளும் நாடுகளும் இரு பிரிவாகி, இரண்டு பெரிய ராணுவ முகாம்களாக விளங்குகின்றன. ஒன்று ஜனநாயகக் கோஷ்டி, மற்றது கம்யூனிஸ்ட் கோஷ்டி. ஒவ்வொரு நாடும் இரண்டு கோஷ்டிகளில் ஒன்றில் சேர்ந்தால்தான் நலமென்று கருதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாபெரும் ஆசிய நாடாகிய இந்தியா இரு கோஷ்டிகளிலும் சேராமல் நடுநிலை வகிக்கின்றது. விலகி நிற்பதோடு அமைந்திராமல், எங்கே சண்டை நடந்தாலும் சமாதானத்திற்காக அது ஒடிச் செல்லுகின்றது. இரு குழாங்களிடத்திலிருந்தும் அது உதவிகளும் பெற்று வருகின்றது.

இதைக் கண்டு சீனாவுக்கு எரிச்சல். வல்லரசுக் கூட்டங்கள் இரண்டில் இந்தியா ஒன்றில் சேரும்படி செய்ய வேண்டும். சீனா ரஷ்யா முகாமைச் சேர்ந்த நாடாக இருந்தது. ரஷ்யா சீனாவுக்கும் உதவி புரிந்தது, இந்தியாவுக்கும் உதவி புரிந்தது. ரஷ்யா தனக்கு மட்டும் உதவியதோடு நின்றிருக்க வேண்டும் என்பது சீனாவின் கருத்து. தெளிவாக ஆராய்ந்து வேண்டுமென்றே ஒரு கொள்கையை ரஷ்யா கடைப்பிடித்து வரும்போது, அதை மாற்றச் சீனாவால் முடியாது. சீடன் தம்மை வெல்லும்படி குரு விடமாட்டார்.

நடுநிலையை விட்டு இந்தியா ஒரே கோஷ்டியில் சேரும்படி செய்ய யுத்தமே ஏற்ற வழி. போர் தொடுத்து விட்டால், இந்தியா உடனே அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய ஜனநாயக நாடுகளிலிருந்து ஆயுதங்களையும் மற்ற உதவிகளேயும் பெறுவதோடு, அந்தக் கோஷ்டியுடனேயே இரண்டறக் கலந்துவிடு மென்று கம்யூனிஸ்ட் சீனா எதிர்பார்த்திருக்க வேண்டும்.

9. இந்தியாவை அடிக்கிற அடியில் ரஷ்யாவும்

61