பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
V


தான் அண்டை நாடாகிவிட்டது அது : 1947 ஆகஸ்ட் மாதத்துக்கு முன் நம்மைச் சேர்ந்த நம் சகோதரர்களைக் கொண்ட நம் நாட்டின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது அது. இன்று நாம் அப்படிச் சொல்லிக்கொள்ள வெட்கப்படும் முறையில் அது பகை நாடாக மாறி, நம்மீது குண்டு போடத் துணிந்தது. சிங்கத்திற்கும் சுண்டெலிக்கும் சண்டை வந்த கதைதான் பாரதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்ட கதை வேறு சிறப்புக்கள் ஏதும் சொல்லிக்கொள்ள வழியில்லாமல், மதத்தின் அடிப்படையில் அரசு அமைத்துக்கொண்டு, அதிகார வெறியும் மத வெறியும் இணைந்து பிடர் பிடித்துத் தள்ள, அவர்கள் நம்மிடம் போர் தொடங்கினர்கள். அவர்களுக்கும் நம் இராணுவ வீரர்கள் பின்னேக்கி ஒடும் வழியைக் காட்டிவிட்டார்கள்.

எலியும் தவளையும் சிநேகமாயிருந்த பஞ்ச தந்திரக் கதையைப் போன்றதன்றி வேறல்ல சீனாவும் பாகிஸ்தானும் உறவு பூண்டு நம்மைத் தாக்குவது. இவர்களுடைய வண்டவாளங்களைச் சித்திரிப்பதே இந்த நூல். இன்று யுத்தகளத்தில் குதித்துள்ள நாடுகளின் மக்களுடைய பொதுவாழ்க்கை, அந்தந்த நாட்டின் அரசியல் நிலை, கம்யூனிஸம் பேசித் திரியும் சீனாவின் வேஷதாரி நிலை ஆகியவை பற்றி இந்த நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியா-சீன-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைபற்றிய விவரங்கள் முதல் அந்தந்த நாட்டின் வளர்ச்சி, திட்டங்கள், பாதுகாப்பு நிலை ஆகியன பற்றியும் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சீனாவும், பாகிஸ்தானும் போர் தொடுத்த சூழ்நிலைகளைப் படம் பிடித்தாற்போல் இதில் காணலாம். எந்த அளவுக்கு இரு