பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வற்றையும் மலையேறுவோர் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். 20,000 அடிக்குமேல் செடிகள் முளைப்பதில்லை. மலைக் கழுகுகள் கூட 25,000 அடிக்கு மேலே பறந்து செல்வதில்லை. ஒருவகைச் செங்கால் காகங்கள் மட்டும் அதற்கு மேலும் 2,000 அடி பறப்பதாகச் சொல்லுகிறார்கள். எனவே உயிர்ப்பிராணிகளே இல்லாத உயரத்தில் மனிதன் ஏறுவதற்கு நவீன விஞ்ஞான வசதிகள் இன்றியமையாதவை.

கெளரி சங்கர் நேப்பாளம்-திபேத்து எல்லையிலுள்ளது. வடக்கே திபேத்திலிருந்தும், தெற்கே நேப்பாளத்திலிருந்தும் அதன் மீது ஏறலாம். பதினோராவது தடவையாக 1953-இல் நேப்பாளத்திலிருந்து அதில் ஏறிய ஆங்கிலேயர் கூட்டத்தில் டென்சிங் என்ற நேப்பாளத்து ஷெர்ப்பா வகுப்பைச் சேர்ந்த வீரரும் ஒருவர். அவரும் ஹில்லேரி என்ற ஆங்கிலேயரும், பலவித இன்னல்களையும் இடையூறுகளையும் தாண்டி, இறுதியாக மலையின் உச்சியை அடைந்தனர். உலகிலேயே முதன்முதலாகக் கெளரிசங்கர் சிகரத்தின் உச்சியில் ஏறிப் பார்த்தவர் இவ்விருவரே. அம்முகட்டிலே அவர்கள் பதினைந்து நிமிடங்கள் தங்கி நின்றனர். டென்சிங் மலைச்சிகரத்தின் பனிக்கட்டியில் ஒரு துவாரம் செய்தார். புத்த பகவானைத் துதித்துக் கொண்டு, அதில் சில மிட்டாய்களேயும், ஒரு நீலவண்ணப் பென்சிலையும் காணிக்கையாக அவர் போட்டு வைத்தார். பென்சில் அவருடைய அருமைப் பெண் குழந்தையின் அன்பளிப்பாம்.

டென்சிங் கூட்டத்தார் அடைந்த வெற்றிக்கு முன்னல் மலையேறிய கூட்டத்தார்களின் அனுபவங்கள் உதவியாயிருந்தன. எனினும், அசைவிலாத ஊக்கமுடையவரை ஆக்கம் தானகவே சென்றடையும் என்பதற்கு டென்சிங் கூட்டத்தாரின் வெற்றி

3