பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


நாடுகளுமே அதர்மத்தின் அடிப்படையில் போர்கள் தொடங்கின. அவற்றுக்கு உலக நாடுகளின் ஆதரவு எப்படி அற்றுப் போகும் என்ற விவரங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

‘பாரதத்தின் மீது போர்’ என்ற வார்த்தைகளையே நம் நாட்டினர் கேட்கப் பொறுக்கமாட்டார்கள். நம் தமிழ் நாட்டினருக்கும் அத்தகைய வீறு ஏற்படுவது இயல்பு. ஆயினும் நிகழ்ந்த போரைப் பற்றிப் பொதுமக்களும் அறிதல் அவசியமல்லவா ? போர் தொடுத்த சீனாவையும் பாகிஸ்தானையும் பற்றிய விவரங்களையும் அவைகளின் அவலங்களையும் எடுத்துக் கூறும் முறையில் ஒரு நூலே வெளியிட்டுப் பொதுமக்களுக்குச் சேவை செய்யலாம் என்ற ஒரு இலட்சியம் கொண்டோம். அந்த இலட்சிய முயற்சி இந்நூலாகப் பரிணமித்திருக்கிறது. இந்தியா - சீன - பாகிஸ்தான் ஆகியவற்றின் வரலாறுகளை அந்தந்தப் பகுதியிலும் வரைந்திருக்கிறார் ஆசிரியர். இந்த நூலைப் படிக்கும் போது பல வரலாற்று உண்மைகளை அறிய வாய்ப்பு ஏற்படுவதுடன், சீன-பாகிஸ்தான் இருநாடுகளும் நம் நாட்டின் மீது போர் தொடுத்ததன் மூலம் உலக சரித்திரத்தில் எத்தகைய ஒரு கறையை ஏற்படுத்தி வைத்துவிட்டன என்ற பேருண்மையும் விளங்கும். வரலாறும் தற்போதையப் பிரச்னைகளும் சேர்ந்து இடம் பெற்றுள்ள இந்நூலைத் தமிழ்நாட்டினர் மனமார வரவேற்பர் என்ற நம்பிக்கையுடன் இதை அவர்கள் முன் சமர்ப்பிக்கிறாேம். இந்நூலை வெளியிட அனுமதி அளித்த ஆசிரியர் திரு. ப. ராமஸ்வாமி அவர்களுக்கு எங்கள் நன்றி.

சித. ராமநாதன்