பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே. மேற்கொண்டு பயமில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன், அந்த முகத்திரையை அது கிழித்தெறியத் துணிந்து விட்டது.

1954-இல் அது இந்தியாவுடன் பஞ்ச சீலம் பேசி உடன்படிக்கை செய்துகொண்ட காரணம் என்ன ? சுமார் 5 லட்சம் சதுர மைல் பரப்பும் 15 லட்சம் மக்களும் கொண்ட நமது அண்டை நாடான திபேத்தின் மீது சீனா படையெடுத்து, அதை அடிமைப்படுத்தி, அங்கு 5 லட்சம் படைவீரர்களையும், 50 லட்சம் சீனர்களையும் குடியேற்றி வைத்திருப்பதை இந்தியா பிரமாதமாக எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வதற்காகத்தான் என்று தெரிகின்றது. ஆகவே, பீரங்கிகளின் வாயில் தான் சீனாவின் சாமாதான சகவாழ்வுக் கொள்கை தொங்கிக் கொண்டிருந்தது !

11. 1949-இல்தானே சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஏற்பட்டது! 1962–க்குள் அது எத்தனை சண்டைகளில் வலுவில் புகுந்துகொண்டது ! எத்தனை நாடுகளில் புரட்சிகளைத் துாண்டியது! கடைசியில் கச்சை கட்டிக்கொண்டு மாபெரும் பாரத நாட்டுடன் நேருக்கு நேர் மல்யுத்தம் தொடுத்து விட்டதே ! இந்தப் படையெடுப்புக்கு என்ன அவசரம் ஏற்பட்டது? இதில் ஏதோ முக்கியமான இரகசியம் இருக்கத்தான் வேண்டும்.

சீனா இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை அமைத்து நிறைவேற்றியும் வந்தது. உணவுப் பொருள்களையும், தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருள்களையும் பன்மடங்காகப் பெருக்குவதே அத்திட்டங்களின் நோக்கம். அதன்படி எத்தனை எத்தனையோ முன்னேற்றங்கள் அந்நாட்டில் நடைபெற்றன. உற்பத்திகளில் பல ஆண்டுகளைத் தாண்டி ஒரே பாய்ச்சலாகப்

63