பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 லட்சக்கணக்கான உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சீனாவிலுள்ள தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வந்தார்களாம். ஹாங்காங்கில் பிஸ்கோத்து டப்பாக்கள் முதல் எல்லா வெளிநாட்டு உணவுப் பண்டங்களுக்கும் அடிக்கடி கிராக்கி ஏற்படுவதற்குக் காரணமும் இத்தகைய ஏற்றுமதியென்று சொல்லப்பட்டது. கோடிக் கணக்கான மக்களுள்ள நாட்டுக்குப் பொட்டலங்களில் உணவு சென்ருல் போதுமா ?

திட்டமிட்டபடி தானியங்களை அதிகமாக உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதால், சீன அரசாங்கம் ஒரு யோசனை செய்தது. ‘நம் நான்கு எதிரிகளை ஒழியுங்கள்!’ என்று நாட்டில் பிரசாரம் செய்தது; மக்களுக்குக் கட்டளையும் பிறப்பித்தது. நாடு முழுதும் நான்கு எதிரிகளை எதிர்த்துப் போரும் நடந்தது. அந்த எதிரிகள் யாவர்? ஈ, கொசு, எலி, புரு ஆகிய நான்குமே எதிரிகள் ! நாட்டார் அனைவரும் ஈக்களே அடிப்பதிலும், கொசுக்களை ஒழிப்பதிலும், எலிகளைப் பிடிப்பதிலும், புறாக்களின் மீது கற்கள் வீசிக் கொல்லுவதிலும் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் காரணம், அந்த ஜந்துக்கள் மக்கள் உண்ணக் கூடிய தானியங்களை அழித்துவிடுகின்றன என்பதே. மற்ற நாடுகளிலும் ஈ, கொசு, எலிகளின் உபாதியைத் தடுக்க ஏற்பாடு செய்வதுண்டு. ஆனால் அதைப் போராக நடத்துவதில்லை. சீனாவில் ஒவ்வொரு தானிய மணியையும் பாதுகாத்துச் சேமித்து வைக்கவேண்டிய அவசியமிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகும். சமுதாயத்தின் தேவைக்கு மேல் உற்பத்தி இருந்தால்தான், அது வாழ்ந்து வர முடியும். சீனாவில் சென்ற 16 ஆண்டுகளில் தேவைக்கு வேண்டியதையே இன்னும் உற்பத்தி செய்ய முடியவில்லை !

இ. சீ. பா.—5

65