பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 விவசாய நஷ்டங்களைப் போலவே மற்றும் சில தொழில்களிலும் அபிவிருத்தியில்லை.

பாலும் தேனும் ஆறாக ஒடுமென்று எதிர்பார்த்த மக்கள் கொதிப்படைந்து குமுறிக்கொண்டிருந்தார்கள். பசி வந்தால் பத்தும் பறந்துவிடுமே! மக்களின் சிந்தனையைப் பட்டினி, பஞ்சத்திலிருந்து வேறு திசையில் திருப்புவதற்காகச் சீன அரசாங்கம் திடீரென்று இந்தியா மீது போர் தொடுத்திருக்க வேண்டும். போரில் ஏற்படும் வெற்றிகளைக் கண்டு மக்கள் சிறிது பொறுமையுடன் இருக்கக்கூடும். அத்துடன் யுத்தகால அவசியமென்று அவர்களை மேலும் அதிகமாய்ப் பலவந்தமாக அடக்கி வைக்கவும் வசதி ஏற்பட்டது.

இன்னும் 25 ஆண்டுகளில் சீன மக்களின் தொகை 65 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்ந்துவிடும். இப்போதுள்ள நிலங்கள் தாம் அப்போதும் இருக்கும். ஆயினும் 100 கோடி வயிற்றை நிரப்புவதற்கு வழி காணவேண்டுமே! இதையே சரியாகக் கவனிக்க முடியாத கம்யூனிஸ்ட் சர்க்கார் வெளிநாடுகளுக்கு வந்து வாணவேடிக்கைகள் காட்ட முற்பட்டுவிட்டது.

12. உலக நிலையைச் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உன்னிப்பாய்க் கவனித்து வருபவர்கள். இரண்டு வல்லரசுக் கோஷ்டிகளிடமும் உலகத்தையே நாசம் செய்யக் கூடிய அணுகுண்டுகள் இருக்கின்றன. எந்த நேரத்திலும் மூன்றாவது உலக யுத்தம் மூளலாம். வல்லரசுகள் எரிமலையின் உச்சியில் ஏறி அமர்ந்திருக்கின்றன. எரிமலை எப்பொழுது வெடிக்குமென்றுதான் தெரியவில்லை. அத்தகைய மூன்றாவது உலக யுத்தம் மூள்வதற்கு முன்னல், சீனா தான் கைப்பற்றவேண்டிய நாடுகளையும், பிராந்தியங்களையும் கைப்பற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் தான் தொடுக்கும் போர்களே மூன்றாவது பெரும்போரை உண்டாக்காமலும்

66