பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 பேசிவந்தார். இதையே அவர் ‘சமாதான சகவாழ்வு’ என்று கூறிவந்தார்.

சமாதானத்திற்கும் சக வாழ்வுக்குமே சீனா சத்துரு. உலகம் முழுதும் கம்யூனிஸம் பரவும்வரை போரை விடாமல் நடத்தி வரவேண்டும் என்பது அதன் கருத்து. கம்யூனிஸ்த்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையில் சகவாழ்வு என்பதே கூடாது என்றும் அது கூறுகின்றது. அணுகுண்டுகளை எதிரிகள் மீது வீசாமல் கையிலேயே வைத்துக்கொண்டு ஒதுங்குவது கோழைத்தனம் என்று அது கண்டனம் செய்கின்றது.

இந்த ரஷ்ய-சீன விவாதம் நாளுக்கு நாள் முற்றி வந்து, இரு கம்யூனிஸ்ட் குழாங்களுக்கு மிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

இடையில் சீனா தன் கொள்கையை நிரூபித்துக் காட்ட இந்திய எல்லையில் குதித்தது!

14. ஸோவியத் கம்யூனிஸ்டுகளின் தத்துவத்தை நடைமுறையில் பார்த்தால், அது வெறும் வரட்டுக் கம்யூனிஸமாக இல்லை. கம்யூனிஸ்த்தோடு நாட்டுப் பற்றும் கலந்து காணப்படுகின்றது. இரண்டாவது உலக யுத்தத்தில் ரஷ்யா ஹிட்லரின் படைகளை எதிர்த்துப் போரிடுகையில், “நம் தேசியப் போராட்டம்” என்றுதான் கூவி, மக்களைத் திரட்டி வெற்றிகொண்டது. கம்யூனிஸ்த்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் பண்பு அங்கு மக்களுக்கு மில்லை, தலைவர்களுக்குமில்லை. நாட்டைப் பேணிப் பாதுகாக்கவேண்டும்; அதிலே கம்யூனிஸம் வளர்ந்து நிலைக்கவேண்டும். நாட்டைப் புறக்கணித்துவிட்டு வெறும் கம்யூனிஸ்த்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதில் அவர்களுக்கு நாட்டமில்லை.

சீனாவும் அப்படித்தான். பல சமயங்களில் ரஷ்யக்

68