பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கம்யூனிஸ்ட் தலைவர்களுடைய ஆலோசனைகளையும், கட்டளைகளையும், சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீறி நடந்திருக்கின்றனர். சீனாவுக்கு எது நன்மை என்பதிலேயே அவர்களுக்கு மிகுந்த அக்கறை. ஆகவே சீனக் கம்யூனிஸத்திலும் தேசபக்தி இரண்டறக் கலந்துள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சீனா. தன் இஷ்டம் போலவே நடந்து கொள்ள விரும்புகின்றது. ரஷ்யாவின் யோசனைகளைக் கேட்க அது தயாராயில்லை.

15. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மாலே - துங், ஐரோப்பாவின் ஆதிக்கியத்திற்காக அடோல்ப் ஹிட்லர் நடந்துகொண்டதைப் போலவே ஆசியாவில் சர்வாதிகார வெறியுடன் நடந்து வருகிறார். ஆனால் ஹிட்லர் கம்யூனிஸத்தின் எதிரி. மா–கம்யூனிஸ்ட் தத்துவம் பேசிக்கொண்டே, ஹிட்லரைப் போல் நடிக்கிறார். நாடு நாடாகப் போர்களைக் கிளப்பி வருகிறார். போர்களில் தர்மம் நியாயம் பார்க்கக் கூடாதென்று உபதேசிக்கிறார். பாரத நாட்டின் மீதே படையெடுக்க உத்தரவு செய்த அவருடைய ஆணவம் ஹிட்லருடைய ஆணவத்தை ஒத்திருக்கின்றது.

1937-இல் ஆஸ்திரிய அரசாங்கத் தலைவர் ஷஸ்ணிக்கை ஹிட்லர் அழைத்தார். மூனிக்கில் சந்திப்பு ஏற்பட்டது.

ஷுஸ்னிக்கிடம் ஒரு காகிதம் கொடுக்கப்பெற்றது. அதிலுள்ள விஷயத்தில் ஒர் எழுத்தையும் மாற்ற முடியாதென்றும், உடனே கையெழுத்திடாவிட்டால், ஜெர்மன் படைகள் ஆஸ்திரியா மீது பாயுமென்றும் ஹிட்லர் எச்சரிக்கை செய்தார்.

போரைத் தவிர்ப்பதற்காக ஷுஸ்னிக் அந்தக் காகிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஆஸ்

69