பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 திரிய அரசாங்கத்தைத் தாமாக ஹிட்லரிடம் ஒப்படைப்பதாகவே அதில் எழுதியிருந்தது. அது ஆஸ்திரியாவின் மரண சாஸனம்! இவ்வாறு ஒரு குண்டுகூடச் சுடாமல் ஆஸ்திரிய நாடு ஹிட்லரின் கைக்குள் விழுந்துவிட்டது.

அடுத்தாற்போல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி திரு. சேம்பர்லேனும், பிரெஞ்சுப் பிரதம மந்திரி திரு. டலாடியரும், இத்தாலிய சர்வாதிகாரி முஸாேலினியும் சேர்ந்து ஹிட்லருடைய படைகள் ஸெக்கோஸ்லோ வேகிய நாட்டில் சுடேட்டன் பகுதியைப் பிடித்துக் கொள்ள அனுமதியளித்துக் கையெழுத்திட்டார்கள். இதனால் 36 லட்சம் ஜனங்களும், 11,000 சதுர மைல் பரப்புள்ள பிரதேசத்துடன் தொலைந்தனர் !

ஹிட்லர் சுடேட்டன் பகுதியுடன் நிற்கவில்லை. பின்னல் ஸெக் நாடு முழுவதையுமே விழுங்கி விட்டார்.

இந்த நிகழ்ச்சிகளிலிருந்து இங்கிலாந்து, ஃபிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளைப் பற்றி அவர் என்ன கருதியிருந்தார் என்பது தெரியும். “நம் எதிரிகள் அற்பமான புழுக்கள் !” என்று அவர் கூறினர்.

ஆசியாவிலுள்ள நாடுகளும் “அற்பப் புழுக்கள்” என்றுதான் சீனச் சர்வாதிகாரி மாஸெ-துங்கின் கண்களுக்குத் தோன்றுகின்றன ! ஆனால் ஹிட்லருடைய வல்லமையில் ஆயிரத்தில் ஒரு பங்காவது மாவிடம் உண்டா ? ஜெர்மனி விஞ்ஞானத்தில் தலைசிறந்த நாடு. அங்கே மேதாவிகளும், சிறந்த விஞ்ஞானிகளும், தத்துவ ஞானிகளும் நிறைந்திருந்தார்கள். மக்கள் திறமான போர்ப் பயிற்சியுடன் விளங்கி ஞர்கள். அவர்கள் அஞ்சா நெஞ்சர்கள். அத்தகைய ஜெர்மானியர் அனைவரும் ஹிட்லருக்கு அடங்கி அவருடன் ஒத்துழைக்க நேர்ந்தது. அதற்கு மூலகாரணம்

70