பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 அப்போதிருந்த நிலைமை. அப்பொழுது ஜெர்மனி ‘வாழ்வா, மரணமா?’ என்ற நிலையிலிருந்தது. அந்த நிலைமையை ஹிட்லர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். போலந்து மீது படையெடுத்து வெற்றி கொண்டார். டென்மார்க் தேசத்தில் படையெடுத்தார். அப்பொழுது டேனிஷ் மக்கள் காலை உணவருந்தி எழுந்திருக்கு முன்பே நாடு ஹிட்லர் வசமாகிவிட்டது. பெல்ஜியம், ஹாலந்து முதலிய நாடுகளும் அவர் காலடியில் உருண்டன. உலகிலேயே சிறந்த படையென்று புகழ் பெற்ற ஃபிரெஞ்சுப் படையை ஏழே நாட்களில் முறியடித்துக் காட்டினர் ஹிட்லர். பல்கேரியா, ருமேனியா, யுகோஸ்லேவியா, ஹங்கேரி, கிரீஸ் ஆகிய எதுவும் அவர் படைகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. பின்னால் அவர் ரஷ்யாவை நோக்கித் திரும்பினர். வடக்கே பால்டிக் கடலிலிருந்து தெற்கே கருங்கடல் வரை ஆயிரம் மைல் அகலமுள்ள மாபெரும் போர் அரங்கத்தின் வழியே அவருடைய நாஜிப் படைகளும், பீரங்கிகளும், டாங்குகளும், கவசம் பூண்ட லாரிகளும், வெடிகுண்டு விமானங்களும் ரஷ்யா மீது படையெடுத்துச் சென்றன. 1945 வரை நடந்த அந்தப் போராட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. ரஷ்யா ஹிட்லரைப் புறமுதுகு காட்டச் செய்தது.

கடைசியில் ஹிட்லர் விஷம் பருகி மாண்டார். அவர் உடலை பெர்லின் நகரிலே குண்டு துளேத்த ஒரு குழிக்குள்ளே தள்ளி மூடினர் அவருடைய தாேழரான ரிப்பன் டிராப் என்ற மந்திரி மா-வின் மெய்ச் சீடராக விளங்கி, முகத்தில் புன்னகையும், நெஞ்சில் கரவடமும், கையில் கொலைக் கருவியும் கொண்டு ஒவ்வொரு நாடாக ஏமாற்றி வரும் சூ என்-லாய் ரிப்பன் டிராப் ஹிட்லருக்குச் செய்து வந்த பணிகளை இப்போது சீன நாட்டு நகல் ஹிட்லருக்குச் செய்து

71