பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தாகக் கற்பனை செய்து சென்னைப் பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்டது! சீனாவில் உணவுப் பொருள்களே கிடைக்காத ஒரு பகுதியில் பாம்புகளைக்கூட ஜனங்கள் உண்பதுண்டு. பாம்பிலிருந்து பல்லி, கரப்பான்வரை கற்பனை முற்றியிருக்கிறது! இவ்வாறே நம் நாட்டின் மற்றைப் பகுதிகளிலும், எங்குமே, சீனரிடம் அளவற்ற வெறுப்பும், வெஞ்சினமும் பொங்கிக்கொண்டிருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாகச் சீனா தேடிவந்த புகழையும் நட்பையும் ஒரு நொடியில் தகர்த்தெறியவே சீனக் கம்யூனிஸ்ட் சர்க்கார் முனைந்து விட்டது. சீன வெற்றிப் பாதையை விட்டு விலகி அழிவுப் பாதையிலேயே ஆவேசத்துடன் இறங்கியுள்ளது.

16. மேலே விவரிக்கப் பெற்ற காரணங்களுடன், சீனப் படையெடுப்புக்கு மற்றும் ஒரு முக்கியமான காரணம் உண்டு. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மீது சீனக் கம்யூனிஸ்டுகளுக்குத் தீராப் பகையுண்டு. இந்தியாவுக்கு அமெரிக்கர் உதவிக்கு வந்தால், அவர்களே இந்திய மண்ணிலேயே சந்திக்கலாம் என்றும் சீனா ஆசை கொண்டிருக்கலாம். கொரியாவில் அப்படித் தான் நடந்தது. ஆனால் இந்தியா கொரியா அன்று. சீனா ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி இந்தியாவில் தன் ஆயுத தளவாடங்களையும், படைகளையும் கொண்டுவந்து நீண்ட நாள் போரிட முடியாது.

17. இந்தியா அமெரிக்காவுடனும், இங்கிலாந்துடனும் நெருங்கிய நல்லுறவு கொண்டுள்ளது. ஆயினும் வல்லரசுகளுடன் இந்நாடு ‘கூட்டுச் சேராத’ கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இதை அமெரிக்க முகாமுடன் சேர்ந்துவிடும்படி செய்யவும், பின்னர் ஆசிய, ஆப்பிரிக நாடுகளிடம் இந்தியா ஏகாதிபத்திய முகாமுக்கு வால் பிடிக்கிறது என்று தம்பட்டமடிக்கவும் சீனா விரும்பியது.

74