பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது18. இந்தியா மற்ற வல்லரசுகளைப் போல இன்னும் பூரண இராணுவ வலிமை பெற்றிருக்கவில்லை. அணுச் சக்தியையும், அதை உண்டாக்குவதையும் அறிந்திருந்தும், இந்தியா அணுகுண்டு தயாரிக்க விரும்பவில்லை. நிலம், நீர், ஆகாயப் படைகள் அமைப்பதில் சுதந்தர இந்தியா கோடிக்கணக்கான பொருளைச் செலவிட்டு முயற்சிகள் செய்துவந்தது. ஆயினும் வெறும் படைகளால் மட்டும் பயனில்லை. படைகளுக்குப் பக்கபலமாக இருப்பவை பல்லாயிரம் தொழிற் சாலைகளும், விவசாய உற்பத்திகளும். அவைகளைக் கவனிக்க இந்தியா மாபெரும் திட்டங்களை வகுத்து, நிறைவேற்றிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு பொருமையடைந்தது சீனா. இந்தியா பூரண வல்லமை பெறுமுன்பே தாக்க வேண்டுமென்று முனைந்தது.

19. இந்தியா பயிற்சி பெற்ற கோடி சிப்பாய்களைக் கொண்ட தரைப்படையும், கடல்களைக் கலக்கக் கூடிய பெரிய கடற்படையும், ஆயிரக்கணக்கான போர் விமானங்கள் அமைந்த ஆகாயப்படையும் பெற்றிருந்தால், சீா இந்தியாமீது படையெடுத்து வரக் கனவிலும் கருதியிருக்குமா? நம் குறைபாடுகளே ஆராய்ந்து தெளிந்து வெகு விரைவிலே நாம் அவற்றைக் களைந்தெறியவேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பால், அக் குறைபாடுகளில் சில தாமாகவே அகன்றுவிட்டன. எஞ்சியவைகளையும் நாம் நீக்கிக்கொண்டு, நம் வல்லமையைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். இனி நம் பலவீனங்களில் முக்கியமான சிலவற்றைக் கவனிப் போம்.

நம் குறைபாடுகள்

இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தி, சத்யாக்கிரகப் போர்கள் நடத்திச் சுதந்தரத்தை எளிதில் அடை

75