பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நாடு, நாடுதான் காங்கிரஸ் என்ற நிலை மாறிவிட்டது. தவிர விடுதலை பெற்ற பிறகு, பழைய வீரம், தியாகம், இடைவிடாத தன்னலமற்ற தொண்டு, ஒற்றுமை, கட்டுப்பாடு, மக்களோடு மக்களாய்க் கலந்து உறவாடும் மனப்பான்மை ஆகிய நற்பண்புகளெல்லாம் நலியத் தொடங்கின. தலைமையிலுள்ளோருடைய கட்டளைகளை உடனுக்குடன் நாடெங்கும் நிறைவேற்றும் தொண்டர் குழாங்களும் அதிகமாயில்லை. நாட்டின் நகரங்களிலும், பட்டி தொட்டிகளிலும், மேடைகளிலேறி வீரமுழக்கம் செய்து பேசும் நாவலர்களும் அருகிவிட்டனர். பெரும்பாலான எழுத்தாளர்கள் அன்றாடச் செய்திகளை மொழிபெயர்த்து வெளியிடுவதையும், பொழுது போக்குக் கதைகள் முதலியவை எழுதுவதையும் தொழிலாய்க் கொண்டுள்ளனர். அதாவது, நமது மாபெரும் தேசிய சுதந்தரப் புரட்சி 1947, ஆகஸ்ட் 15 ஆம் தேதியோடு முற்றுப்பெற்றுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது. மேற்கொண்டு நடைபெற வேண்டிய மலைபோன்ற காரியங்கள் யாவற்றையும் நமது புதிய அரசாங்கம் தானகவே செய்துகொள்ளும்படி நேர்ந்தது.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக அடிமை வேதனையில் அவதிப்பட்ட இந்தியா, ஐரோப்பிய நாடுகள் இயந்திரத் தொழில்களில் வேகமாக முன்னேறி வந்த காலத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த இந்தியா, இரண்டு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்தைச் சுமார் 25 ஆண்டுகளில் அடைய வேண்டியிருக்கின்றது. ஒரே பாய்ச்சலாக நூற்றாண்டுகளைத் தாண்டிப் பாய்வது முடியக் கூடிய காரியமே. வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று நவீனத் துப்பாக்கிகளை ஏந்துவதற்கு, இடையில் கழிந்துபோன ஒவ்வோர் ஆயுதத்திலும்

78