பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பல்லாண்டுகள் பயிற்சி பெறவேண்டிய அவசியமில்லை. விற்களை ஏந்திய கைகள் அவைகளை எறிந்துவிட்டு, நேராகத் துப்பாக்கிகளை ஏந்திச் சுடமுடியும். தவிர அம்பெய்வதைப் பார்க்கினும் இக்காலத்தில் விமானத்திலிருந்து வெடிகுண்டுகளைக் கீழே உருட்டுவது எளிதான செயல்தான். மக்கள் சிரமப்பட்டுச் செய்ய வேண்டிய வேலைகள் பலவற்றையும் எளிதில் தாமே செய்யக்கூடிய இயந்திரங்கள் தோன்றிவிட்டன. நல்ல மதியும், பயிற்சியுமே இக்காலத்துத் தொழில் களுக்கு அவசியம்.

இந்த முறையில் வெகு வேகமாய்ப் பாய்ந்து பாய்ந்து முன்னேற்றமடைவதும் பெரும் புரட்சியேயாகும். இந்தப் புரட்சியை நம் ஜனநாயக அரசாங்கம் மட்டும் தனியே நிறைவேற்ற முடியாது. எப்பொழுதும் மக்களுடைய இடையறாத தொடர்பு இருந்து கொண்டே யிருக்கவேண்டும். ஏதோ சில இடங்களில் ஜனங்களிலே சிலர் சேர்ந்து சாலைகள் அமைத்து விட்டால் போதாது. நமது பெரிய சமுதாயத்திற்கு வேண்டிய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கி நிறைவேற்றுவதிலும், அரசியலை உறுதியாக நிலை நாட்டுவதிலும் சமுதாயம் முழுதுமே ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அளவிட முடியாத தொடர்பும் ஒத்துழைப்பும் இப்பொழுது இல்லை. அவை இருந்திருந்தால், இதற்குள் கங்கைத் தண்ணிர் காவிரியில் பாயும்படியான திட்டம் கூட எளிதில் நிறைவேறியிருக்கும். லட்சக் கணக்கான குடியானவர்களை விவசாயப் படையாக அமைத்து நாடெங்கும் விவசாயத்தைப் பெருக்கி யிருக்கலாம். எவரும் சோம்பியிராதபடி கிராமங்கள், பட்டிகளிலெல்லாம் பல்லாயிரம் தொழில் நிலையங்களை அமைத்திருக்க முடியும். நாடு முழுதும் கூட்டுறவு ஸ்தா

79