பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


புனிதத் தலங்கள்

செடிகள் மரங்களை இந்தியர் சரியாகப் போற்றுவதில்லையென்று ஒர் ஐரோப்பியர் ஒரு சமயம் குறை சொன்னர். அதற்குத் தமிழ் அறிஞர் ஒருவர், நீங்கள் போற்றுகிறீர்கள். நாங்கள் அவைகளை விழுந்து வணங்குகிறாேம். எங்கள் தலவிருட்சங்களை வந்து பாருங்கள்!’ என்று மறுமொழி கூறினராம். நம்மவர்களுக்கு வாவியெல்லாம் தீர்த்தம், மலையெல்லாம் தெய்வம், கடற்கரைகளும், நதிக்கரைகளும் புனிதத் தலங்கள்! எனவே வானளர்வி நிற்கும் இமயமால்வரை நம் நாடு முழுதுமே புனிதமாகப் போற்றப்படுவதில் வியப்பில்லை. நந்தா தேவி, பஞ்சசூலி, திரிசூலி, நங்க பர்வதம் முதலிய இமயச் சிகரங்கள்யாவும் புனிதமானவை. கெளரி சங்கரும் கயிலாய மலையும் அவைகளைவிட மேலான தெய்விகத்தலங்கள். சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா முதலிய புனித ஆறு கள் இமயத்திலேதான் உற்பத்தியாகின்றன. திருக்கேதாரம், பதிரிகாசிரமம், கங்கோத்திரி, யமுனேத்திரி, அமரநாதம், பசுபதிநாதம், துங்கநாதம் முதலிய இந்துக்களுக்கு முக்கியமான புனிதத்தலங்கள் பலவும் இமயத்தின் சாரல்களிலே அமைந்துள்ளன.

திருக்கயிலாயத்தில் கோயிலுமில்லை, தெய்வச் சிலையுமில்லை. அம்மலையையே இறைவன் வடிவமாக மக்கள் போற்றுகின்றனர். தொலைவில் நின்று அதை வாழ்த்தி வணங்குவதும், அதனைச் சுற்றி வருவதும் இம்மையில் பெயற்கரிய பேறு என்று கருதுகின்றனர்.

இமயமலைத் தொடர்கள் சிறிய இமயம், பேரிமயம், எல்லை கடந்த இமயம் என்று மூன்று பிரிவுகளாக உள்ளவை. இவைகளில் கயிலையங்கிரி எல்லை கடந்த இமயப் பகுதியைச் சேர்ந்தது. அது மேற்குத் திபேத்தின் எல்லையில் மானஸ்சரோவர் என்னும்

5