பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பனங்கள் வலைப் பின்னலைப்போல் நெருங்கியிருக்கும் படி அமைத்திருக்க முடியும், பிறரிடம் கடனுக்குப் போகாமல் நாமாக அடைந்துள்ள பெருஞ் செல்வம் நம் மக்களின் பெருந்தொகை. 47 கோடி மக்களின் சமுதாயம் உறுதியுடன் நினைத்தால், முடிக்க முடியாத காரியம் என்ன உண்டு ?

இதுவரை நமது அரசாங்கத் திட்டங்களின் மூலம் எத்தனை எத்தனையோ பெருந் தொழில்களும், பாசன அமைப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன. எந்தக் காலத்திலும் இந்நாடு கண்டிராத வேகத்தில் வேலைகள் நடந்து வருகின்றன. ஆயினும் நம் குடியரசு பெற்றுள்ள வெற்றிகளைப் பெரும்பாலான மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய அளவு பிரசாரம் கூடச் செய்ய முடியவில்லை! நாடும் அவ்வளவு பெரிது, மக்கள் தொகையும் அவ்வளவு அதிகம்.

1947 முதல் இன்றுவரை நம் மக்களில் பெரும்பாலார், மாடு, மரம், கார், யானை, சிங்கம், குடை, பானை முதலிய அடையாளங்களைப் பார்த்து ஒட்டுச் செய்ய வேண்டிய நிலையிலுள்ளனர். பொது மக்களின் எழுத்தறிவு இந்நிலையிலுள்ளது. எல்லோரையும் ஒரே படியாகக் கல்விமான்களாக்கிவிட முடியாது என்பது உண்மைதான். ஆனல் எழுத்தறிவே யில்லாத கோடிக் கணக்கான மக்களைக்கொண்டு ஜனநாயகத்தை எப்படி நடத்துவது ? ‘பெரும்பாலும் எழுத்தறி வில்லாதவர்கள் நிறைந்துள்ள நாட்டில் அரசியல் இருக்கிறது என்று சொல்லுவது வெறும் பொய், பித்தலாட்டம்’ என்று ரஷ்யத் தலைவர் லெனின் கூறியுள்ளார்.

அரசாங்கம் கோடிக் கணக்காய்ச் செலவிட்டு நிறுவியுள்ள கல்வி ஸ்தாபனங்களில் கல்வி கற்றுள்ள படிப்பாளிகளும், அறிவாளிகளும் பெரும்பாலும் சொந்தக் காரியங்களேயே கவனித்துக் காலம் கழிக்

80