பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீனாவின் ஆக்கிரமிப்புப் போர்

‘நேபாவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்விகள் துக்கப்பட்டு, வெட்கித் தலைகுனியத் தக்கவை. அங்கு இழந்த கெளரவத்தை நாம் மீட்கவேண்டும்.’

—ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்




முன்னேற்பாடுகள்

சீன-இந்திய எல்லைப்புற விவகாரம் போரில் வந்து முடியுமென்று இந்திய அரசாங்கம் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் சீனா இந்தியாவுடன் போர் செய்ய வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாக ஏற்பாடு செய்துவந்தது. மேலே வல்லரசுகளைச் சேர்ந்த பல அரசியல் நிபுணர்கள் சீனப் படையெடுப்பைப் பற்றி முன்னதாகவே தெரிந்திருந்தனர். திபேத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள் பலரும் அங்கே சீனா போருக்கு ஆயத்தம் செய்து வருவது பற்றித் தெளிவாகச் செய்திகளை அறிவித்தனர்.

சீனர்கள் லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பிரதேசம் என்ற நேபாவிலும் சென்ற சில ஆண்டுகளாகவே பல இடங்களையும் சுற்றிப் பார்த்து, இயற்கையமைப்பையும், கிராமங்களையும், மக்கள் நிலைமையையும், நம் காவல் நிலையங்களையும்பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். சில இடங்களில் நமக்கு எதிராகப்

85