பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கின. டோலா 12,500 அடி உயரத்திலும் கின்ஸி மானே 9, 600 அடி உயரத்திலும் உள்ளவை. சீனர்கள் பீரங்கிகளையும், இயந்திரத் துப்பாக்கிகளையும் உபயோகித்துக்கொண்டு, எதிர்ப்பை இலட்சியம் செய்யாமலும், தங்களிடையே ஏற்பட்ட உயிர்ச் சேதத்தைப் பொருட்படுத்தாமலும், முன்னேறி வந்தார்கள். இந்தியப் படைவீரர்கள் வீரத்துடன் எதிர்த்து நின்றார்கள். சுதந்தரமான தாய்நாட்டைக் காக்கும் பெருமை தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டும், சீனருடைய அநாகரிகத்தையும் துரோகத்தையும் எண்ணி வருந்திக்கொண்டும், அவர்கள் உறுதியுடன் போராடினர்கள். எண்ணிக்கையில் சீனர் மிகுதியாக இருந்தனர்; ஆயுதங்களும் அவர்களிடம் அதிகம். குறைந்தது மூன்று மாதமாவது திட்டமிட்டு, பனிப் பிரதேசத்திற்குத் தேவையான உடைகள் முதலியவற்றுடன், அவர்கள் ஆயத்தமாக வந்திருந்தனர். எதிர்பாராத திடீர்த் தாக்குதலை நாம் சமாளிக்க வேண்டியிருந்தது. நம் படையினர் அளவில் குறைந்திருந்தனர். ஆனால் வீரத்திலும், உறுதியிலும் அவர்களுக்கு இணையானவர் இல்லை யென்னும்படி, ஒவ்வொரு வீரனும் பன்மடங்கு வல்லமையுடன் பாரத பூமியின் ஒவ்வோர் அங்குலத்தையும் பாதுகாத்து நின்றன். எனினும், டோலா, கின்ஸிமானே காவல் நிலையங்களை நம் படைவீரர் காலி செய்து வெளியேற நேர்ந்தது. இந்நிலையங்களெல்லாம் நேபாவின் மேற்குப் பகுதியில் காமெங் டிவிஷனில் உள்ளவை.

நேபாவில் மூன்று நான்கு அங்குலம் பணி பெய்து கொண்டிருந்த போதிலும், சீனர்கள் மக்மகான் கோடு வரைக்கும் தங்கள் ராணுவ வாகனங்களைக் கொண்டுவர வசதி செய்து கொண்டிருந்தனர். நம் படைகளுக்கு உணவு முதலிய பொருள்களைக்கூட நாம்

87