பக்கம்:இந்தியா எங்கே.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நம் தாய்

மென் பறவை போல

சோக உலகை மறந்து

சுகத்தில் மறந் துலாவ (шот) குடிவெறியும் கூத்தின் மயக்கமும் கொண்ட சண்டிகள் நிறைந்த மண்டபம் ஆண் அடிமை களின் ஓயாத வேலைகள். அவர்களும் மதுவைப் பரிமாறுகின்றனர். மாட்சிமை தங்கிய மற்ற பிரபுக்களுக்குத் துரோகம் இழைத்த குற்றத்தைச் செய்தவர்களாவார்கள். அதற்குப் பயந்தே அஞ்சி நடுங்குகின்றனர். ஒரு மாட்சிமை தங்கிய பிரபுவை தான்கு அடிமைகள் துக்கி வரு கின்றனர் :

சிம்மாசனத்தின் மீது வைக்கின்றனர். அவனுக்குச் சகலவித அதிகாரங்களும் உண்டு பனித்திவின் தலைவன். பெயர் இன்பவாகனன் இருட்டான இதயத்தான் ஏற்கனவே ஏகப்பட்ட அலங்காரங் களைச் செய்திருந்த அவனை, மேலும் மேலும் பெண்கள் வலம் வந்து அணி செய்தார்கள். ஒரு அடிமைப்பெண் அளவுக்கு மீறி ஆடியதால் களைத்துச் சுருண்டு வீழ்ந்து விடுகிறாள். இதைப் பார்த்த மற்ற அதிகாரி ஓடி வந்து அவளைச் சவுக்கான் அடிக்கிறான். மகா பிரபுக்கள் சபையிலே அவ்வாறு விழுவது ஒரு மன்னிக்க முடியாத பிழையாகும். இக் கொடுரக் காட்சியை தன் கூரிய விழிகளால் நோக்கினான் ஒரு வாவிப AZZ.602ZZ2یے

அவன் உள்ளே பொங்கிக் குழம்பிய உணர்ச்சி பின் சக்திக்கனல், அவன் செவ்விழியின் சிறு நரம்புப் பின்னலிலே மின்னித் தேங்கிற்று. கட்டுற்ற உடல் பாவும் வெட்டுற்று நடுங்கிற்று. சுற்றிலும் பார்த்தான் சூடான அவன் கரத்தால் ஓங்கி அறைந்தான். கசை வீசிய அதிகாரியின் கன்னடம் சிவந்தது. பின் விளைவு கருதாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/116&oldid=537679" இலிருந்து மீள்விக்கப்பட்டது